Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வைசாலி » வானிலை

வைசாலி வானிலை

கங்கை சமவெளியில் உள்ள பிற இடங்களைப் போலவே வைசாலியில் கடுமையான பருவநிலையே நிலவி வருகிறது. கோடைக்காலத்தில் 45°C –ஐ விட்டு மெர்க்குரி இறங்காத போது, அது குளிர்காலத்தில் 6°C வரையிலும் குறைந்துவிடும். வைசாலிக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவமாக குளிர்காலமான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் உள்ளன.

கோடைகாலம்

மிதவெப்ப பருவநிலை நிலவும் பகுதியில் இருப்பதால் இந்நகரத்தில் மிதவெப்ப பருவநிலை நிலவும் நகரங்களுக்கே உரிய வெப்பமான மற்றும் ஈரப்பதம் குறைந்த கோடைக்காலம் நிலவுகிறது. இந்நாட்களில் வெப்பநிலை 45°C வரையிலும் சென்று விடும். வைசாலிக்கு செல்லும் போது மெல்லிய பருத்தி ஆடைகளை கொண்டு செல்வது நலம்.

மழைக்காலம்

வைசாலியில் ஆகஸ்ட் மாதம் துவங்கும் மழைக்காலம் அக்டோபர் மாதம் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் கனமான மழைப்பொழிவு இருக்கும். மழைக்காலத்தில் இந்த பிராந்தியம் முழுமையுமே பசுமையால் போர்த்தப்பட்டிருக்கும்.

குளிர்காலம்

வெப்பமானியின் மெர்க்குரியின் அளவு கீழே சென்று விடும் குளிர்காலம், வைசாலிக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற காலமாகும். இந்நாட்களில் பகல் வேலை மகிழ்ச்சிகரமாகவும், இரவு வேளைகள் குளிருடனும் காணப்படும்.