Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » வானிலை

வாரணாசி வானிலை

அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே வாரணாசிக்கு வருகை தருவதற்கான சிறந்த காலகட்டமாகும்.

கோடைகாலம்

வாரணாசியில் கோடைகாலம் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கின்றது. இங்கு உச்ச வெப்பநிலை நிலவும் மாதத்தின் போது மெர்க்குரி சுமார் 45 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். கோடை நாட்களில் வெப்பக்காற்று வீசி அவற்றை மேலும் கடுமையானவையாக மாற்றுகின்றது.

மழைக்காலம்

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் மழைக்காலத்தின் போது இங்கு கடும் மழைப்பொழிவு இருக்கும். இச்சமயத்தில் இங்கு வானிலை ஈரப்பதத்துடன் காணப்படும்.

குளிர்காலம்

வாரணாசியில் குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. வானிலை 12 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையுடன் இதமாகவும், ரம்மியமாகவும் காணப்படும். ஜனவரி மாதத்தின் போது இந்நகரம் பனிமூட்டத்துடன் காணப்படுவதால் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதும், இரயில்கள் தாமதமாக வந்து சேர்வதும் இச்சமயத்தில் இங்கு சர்வசாதாரணமாக நிகழ்கின்றன.