Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விஜயதுர்க் » வானிலை

விஜயதுர்க் வானிலை

விஜயதுர்க் பகுதி மித வறண்ட பருவநிலையை இயற்கையாக கொண்டிருப்பதால வருடம் முழுவதுமே வெப்பமாகவும் ஈரப்பதமான காற்றுச்சூழலுடனும் காணப்படும். எனவே குளிர்காலமே இங்குள்ள சுற்றுலா மற்றும் இயற்கை அம்சங்களை கண்டு அனுபவித்து மகிழ ஏற்ற பருவமாகும்.

கோடைகாலம்

பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரையில் விஜயதுர்க் பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. கோடைக்காலத்தில் அதிகபட்சம்  வெப்பநிலை 320C ஆகவும் குறைந்தப்பட்சம் 270C  ஆகவும் இருக்கும். ஆகவே கோடைக்காலம் இங்கு சுற்றுலா வருவதற்கு ஏற்றதல்ல என்பதாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

கடுமையான வெப்பத்தைத்தரும் கோடைக்காலத்திற்குப் பின்னர் விஜயதுர்க் பகுதியானது ஜூன் மாத இறுதிப்பாதியில் இருந்து அக்டோபர் மாதம் முதற்பாதி வரையிலும் மழைக்காலத்தை அனுபவிக்கின்றது. அபரிமிதமான மழைப்பொழிவை கொண்ட இக்காலத்தில் இப்பகுதியில் வெப்பநிலை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பரில் இருந்து பிப்ரவரி மாதம் முதல் பாதி வரைக்கும் விஜயதுர்க் பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. அமைதியான இந்த பருவகாலமே இங்கு விஜயம் செய்ய ஏற்றதாக கூறப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை மிக குளுமையாகவும் அதிகபட்சமாக 260 டிகிரி வெப்பநிலை மட்டுமேயாகவும் காணப்படும்.