Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விசாகப்பட்டினம் » வானிலை

விசாகப்பட்டினம் வானிலை

விசாகப்பட்டணம் நகரத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு மழைக்காலம் முடிவில் துவங்கி குளிர்காலத்தின் இறுதி வரை உள்ள மாதங்களே ஏற்றதாக உள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களை உள்ளடக்கிய இக்காலத்தில் மிதமான, குளுமையான சூழல் நிலவுகிறது. தீபாவளி மற்றும் நவராத்திரி போன்ற பண்டிகைகளும் குளிர்காலத்தின்போது கொண்டாடப்படுவதால் நகரமும் இக்காலத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும். சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதத்தில் விசாகா உத்சவ் எனப்படும் உள்ளூர் திருவிழாவும் டிசம்பர்-ஜனவரி மாதத்தில் வைசாக் நகரத்தில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோடைகாலம்

மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதம் வரை வைசாக் நகரத்தில் கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 45° C வரையிலும் உயர்ந்து காணப்படும். ஈரப்பதமும் மிக அதிகமாகவே இருக்கும். எனவே கோடைக்காலத்தை சுற்றுலாப்பயணிகள் அறவே தவிர்த்து விடுவது நல்லது.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை விசாகப்பட்டணம் நகரம் கடுமையான மழைப்பொழிவைப் பெறுகிறது. எனவே மழைக்காலம் வெளிச்சுற்றுலாவுக்கு ஏற்றதாக இல்லை. இருப்பினும் அதிக மழைப்பொழிவின் காரணமாக வெப்பநிலை குறைந்து நகரம் இதமான சூழலுடன் காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

குளிர்காலமே விசாகப்பட்டணம் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இங்கு டிசம்பர் மாதம் துவங்கும் குளிர்காலமானது பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரியாக வெப்பநிலை18° C முதல் 30° C வரை என்ற அளவில் காணப்படுகிறது.