Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விருந்தாவன் » வானிலை

விருந்தாவன் வானிலை

நவம்பர்  முதல் மார்ச் வரையிலான பருவமே விருந்தாவன் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இப்பருவத்தில் சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் நிலவுகிறது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நிகழும் ஜன்மாஷ்டமி திருநாளின் (கிருஷ்ணர் பிறந்த நாள்) போது இங்கு யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜுன்  வரை) : விருந்தாவன் பகுதியில்  மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் ஜுன் மாதம் வரையில் நீடிக்கின்றது. இக்காலத்தில் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : விருந்தாவன் பகுதியில்  ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் நிலவுகிறது.  கடுமையான மழைப்பொழிவு காணப்படும் இக்காலத்தில் சூழல் ஈரமாகவும்,  ஈரப்பதம் அதிகமாகவும் காணப்படும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை விருந்தாவன் பகுதியில்  குளிர்காலம் நிலவுகிறது. இனிமையான சூழல் நிலவும் இக்காலத்தில் 12°C  முதல் 20°C  வரை வெப்பநிலை காணப்படுகிறது.