பெங்களூருவில் இருந்து இந்த இடங்களுக்கு அசத்தல் பைக் ட்ரிப்!
மிக அழகிய தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன! அதிலும் பெங்களூருவில் இருந்து சாலை வழியாக இந்த இடங்களுக்கு சென்றால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்!
நந்தி மலைகள் - பெங்களூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள நந்தி மலை சூரிய உதயம் பார்ப்பது விசேஷம்.
சாவன்துர்கா - ஆசியாவின் மிகப்பெரிய ஒற்றைக்கல் சிகரங்களை கொண்ட இந்த மலைகளுக்கு காலையில் ட்ரெக்கிங் செய்யுங்கள்.
மான்சினபெலே - மிகப்பெரிய நீர்நிலையான து வருடம் முழுவதும் ரிவர் ராஃப்டிங் மற்றும் கயாக்கிங் செய்ய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது
ஸ்கந்தகிரி – மலையேறுபவர்களிடையே மிகவும் பேமஸ் ஆன ஸ்கந்தகிரிக்கு இரவில் மலையேறி அதிகாலையில் சூரிய உதயம் பார்க்க வேண்டும்.
லெபாக்ஷி - ராமாயணத்தில் ஜடாயுவுக்கு ராமர் மோட்சம் கொடுத்த இடம் லெபாக்ஷி.
சிவசமுத்திரம் – இங்குள்ள நீர்வீழ்ச்சியை பார்த்தால் அது ஏன் உலகின் 100 நீர்வீழ்ச்சிகளில் இடம் பிடித்துள்ளது என்பதை உணருவீர்கள்!