Tap to Read ➤

இந்த அழகான ரயில் பாதைகளில் பயணம் செய்ய மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியா பல இயற்கை அற்புதங்கள் நிறைந்த அழகிய நாடு! ஆனால் ரயிலில் செல்வதே ஒரு சுற்றுலாவாக இருக்கின்றதே! இதை என்ன சொல்வது? ஆம்! இந்த இடங்களில் கண்டிப்பாக ரயில்களில் உங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நீங்கள் பயணிக்க வேண்டும்!
Yogalakshmy Ponnan
ஜம்மு - உதம்பூர்
நேரத்தை மிச்சப்படுத்த, பூமியின் சொர்க்கமென்று குறிப்பிடப்படும் காஷ்மீருக்கு பெரும்பாலோனோர் விமானத்தில் பயணிக்கின்றனர். ஆனால் நீங்கள் கட்டாயம் ஜம்மு-உதம்பூருக்கு ரயிலில் பயணம் செய்ய வேண்டும்.
ரத்னகிரி - மட்கான்
மகாராஷ்டிராவின் மையப்பகுதியில் மிக அழகான மற்றும் கண்களைத் திறக்கும் இயற்கைக்காட்சிகளை கண்டு மகிழ இந்த கொங்கன் ரயில்வே மார்க்கத்தில் பயணம் செய்யுங்கள்.
கல்கா - சிம்லா
இந்த ஹிமாலயன் குயின் ரயில் பாதையில் நீங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும். பனி மூடிய சிகரங்களும் வெள்ளி போன்ற ஆறுகளும் உங்கள் மனதை கொள்ளையடிக்கும்.
சென்னை - ராமேஸ்வரம்
பாம்பன் பாலம் ரயில் மூலம் வங்காள விரிகுடாவை கடக்கும் போது, உங்கள் முதுகுத்தண்டில் ஏற்படும் சிலிர்ப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஜல்பைகுரி - டார்ஜிலிங்
இமயமலையின் நித்திய அழகைக் காணவும் டார்ஜிலிங்கின் பனி மூடிய மலைகளைக் ரசிக்கவும் இந்த புகழ்பெற்ற மௌண்டெயின் ரயிலில் பயணித்திடுங்கள்.
கன்னியாகுமரி – திருவனந்தபுரம்
2 மணிநேரம் கொண்ட இந்த சிறிய பாதை, சுற்றியுள்ள வசீகரமான அழகு, இயற்கை அழகின் புத்துணர்ச்சி மற்றும் உள்ளூர் வாழ்க்கையின் மிகவும் பழமையான உணர்வை உங்களுக்கு வழங்கும்.
வாஸ்கோடகாமா - லோண்டா
மழைக் காலத்தில் இந்த ரயில் பாதையில் பயணித்து துத்சாகர் நீர்வீழ்ச்சியின் அற்புதமான காட்சியை கண்டு ரசிப்பது என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்!
Next Story - சென்னைக்கு அருகில் இத்தனை நீர்வீழ்ச்சிகளா? அடடே!
சென்னை நீர்வீழ்ச்சிகள்