Madhu AS       Apr 17, 2023

குலதெய்வத்தை வழிபட்டால் இவையெல்லாம் நமக்கு கிடைக்குமா?

நம் ஒவ்வொருவரின் வாழ்வின் மேன்மைக்கும் நன்மைக்கும் உறுதுணையாக இருப்பது நம் குலதெய்வமே! குலதெய்வத்தை வணங்கினால் வாழ்வில் வெற்றியும் செல்வமும் பெறலாம்.

 குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் இந்த உலகில் இல்லை. குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல் காத்து நிற்கும்.

 அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்கி வருவது பல நன்மைகளை பயக்கும்

குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் நமக்கு கிடைக்காது

ஆண்டியை அரசனாக்குவதும், அரசனை ஆண்டியாக்குவதும் குலதெய்வமே. இஷ்டதெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்தது தான்

மற்ற தெய்வத்திற்கும் குல தெய்வத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது தெரியுமா?

  மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள் உண்டு, ஆனால் குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழி தான் பிள்ளைகள்

 குல தெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும்.

குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரககங்களும் துணை நிற்கும்

 குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்கு சமம்.