Tap to Read ➤

கோவாவின் அழகான கோட்டைகள்!!

கோவா என்றால் துடிப்பான நகரம், நாகரிகம், நவீன கலாச்சாரம், பார்ட்டிகள் மட்டுமே நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், கோவா பழமையும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு தொன்மையான நகரமும் கூட! கோவாவின் வரலாற்றச் சிறப்புமிக்க கோட்டைகளின் லிஸ்ட்!
Yogalakshmy Ponnan
1612 இல் சின்குரிம் கடற்கரையில் கட்டப்பட்ட இந்த அகுவாடா கோட்டை போர்த்துகீசிய கட்டிடக்கலைக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.
அகுவாடா கோட்டை
1717 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த சப்போரா கோட்டை அதன் இடிபாடுகளுக்காக அறியப்படும் ஒரு கோட்டையாகும்.
சபோரா கோட்டை
வடக்கு கோவாவின் குவேரிம் கடற்கரையின் தெரேகோல் ஆற்றின் குறுக்கே இந்த கம்பீரமான டிராகோல் கோட்டை கட்டப்பட்டுள்ளது.
டிராகோல் கோட்டை
மாண்டோவி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ரெய்ஸ் மாகோஸ் கோட்டை, முகத்துவாரத்தின் முகப்பைக் காக்கும் கோபுரமாகவும், போர்த்துகீசிய அதிகாரிகளின் தங்குமிடமாகவும் 1551 ஆம் ஆண்டு முதல் செயலில் இருந்தது.
ரெய்ஸ் மாகோஸ் கோட்டை
போர்த்துகீசியர்களால் 1705 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோர்ஜுயம் கோட்டை மபுசா நதிக்கு அருகில் உள்ள அல்டோனா கிராமத்தில் அமைந்துள்ளது.
கோர்ஜூம் கோட்டை
ராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணன் ஆகியோர் 14 வருட வனவாசத்தின் போது
இந்த கோட்டையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
கபோ டி ராமா கோட்டை
மார்கோவா துறைமுகத்தைப் பாதுகாப்பதற்காக 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகீசியர்களால் மோர்முகாவ் கோட்டை கட்டப்பட்டது.
மோர்முகாவ் கோட்டை
Next Story - சென்னையில் உள்ள காடுகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
சென்னையின் காடுகள்