Madhu AS       May 17, 2023

வெறும் 22 ரூபாயில் 24 ஹேர்பின் பென்டுகளை பார்க்கலாம்!

ஆம்! வெறும் 22 ரூபாயில் 24 ஹேர்பின் பென்டுகளுடன் 5 வியூபாயின்ட்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம் தெரியுமாம்.

தர்மபுரியில் இருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ள வத்தல்மலைக்கு  செல்லும் இந்த பேருந்து தான் உங்களை இப்படி அழைத்துச் செல்லுகிறது

 தினமும் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணிக்கு என மூன்று நேரங்களில் இந்த பேருந்து சேவை இயங்குகிறது

 இந்த பேருந்து சேவையைப் பயன்படுத்தி அசத்தலான ஒரு ஹில்ஸ்டேஷன் ரைடு நீங்கள் சென்று வரலாம்

அதோடு மட்டுமல்லாமல் வத்தல்மலை மாசடையாத இயற்கை அழகால் சூழ்ந்துள்ளது.

இந்த கோடையில் ஒரு தனிமையான சுற்றுலா செல்ல ஆசைப்பட்டால் கட்டாயம் வத்தல்மலைக்கு சென்று வாருங்கள்

பெரிதளவு சுற்றுலா ஸ்பாட்டுகள் இல்லையென்றாலும் தனிமை விரும்பிகளுக்கு இது விருந்தாக இருக்கும்

இங்கு செல்வதற்கு சிறந்த நேரம்: செப்டம்பர் – பிப்ரவரி