கோவாவிற்கு செல்ல ஏப்ரல் – ஜூன் வரையே சரியான நேரம் – ஏன் தெரியுமா?
நீங்கள் வருடத்தின் எல்லா மாதங்களிலும் கண்கவர் கடலோர மாநிலமான கோவாவிற்கு செல்லலாம். ஆனால், கோடை வெயிலில் அதாவது ஏப்ரல் – ஜூன் வரையே சரியான நேரம். ஏன் தெரியுமா?
கோவா ஒரு கடலோர மாநிலமாக இருப்பதால் கோடைக்காலத்தில் வெயில் அதிகமாகவே இருக்கும். அதனால் பெரும்பாலான மக்கள் கோவாவிற்கு செல்கின்றனர்.
கோவா சீசன் என்பது நவம்பர் – மார்ச் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் கோவாவிற்கு சென்றால் நீங்கள் நிறைய பணத்தை மிச்சபடுத்தலாம் தெரியுமா?
விமான டிக்கெட்டுகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும்.
5 முதல் 7 நட்சத்திர ஹோட்டல்களை மிகவும் மலிவான விலையில் புக் பண்ணலாம்.
கடற்கரைகளிலும், கஃபேக்களிலும் அமைதியான நேரத்தை செலவிடலாம்.
சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் விரைவாக செல்லலாம்.
பெரும்பாலான கிளப் மற்றும் பார்ட்டிகளுக்கு இலவச என்ட்ரி வழங்கப்படுகிறது
கூட்டம் குறைவாக இருப்பதால் தனிமையில் அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து ரசிக்கலாம்.