Search
  • Follow NativePlanet
Share

யானா - சிவபெருமான் தஞ்சமடைந்த இடம்

9

யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள  சஹயாத்ரி மலைப்  பகுதிகளில் அமைந்திருக்கிறது.

யானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும்  மிகவும் பிரபலமான குன்றுகள்.

ஒருமுறை அசுரர்களின் அரசன் பஸ்மாசுரன் என்பவன் கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது பஸ்மாசுரன் யார் தலையிலாவது கையை வைத்தால் அவர்கள் நொடிப்பொழுதில் சாம்பலாகிவிடுவார்கள் என்பதே அவன் வாங்கிய வரம்.

ஆனால் அந்தக்  கொடிய அரக்கன் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க எண்ணி, அவரை துரத்திக்கொண்டு ஓடினான். அவனிடமிருந்து தப்பித்து ஓடிய சிவபெருமான் தஞ்சமடைந்த இடம் தான் பைரவேஸ்வரா ஷிக்கரா என்ற குன்று.

அப்போது சிவனை காப்பாற்றுவதற்காக மோகினி என்ற  அழகிய இளம் மங்கையாக உருவெடுத்து வந்தார் விஷ்ணு பகவான். மோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தான்.

அந்த சமயத்தில் மோகினியாய் நடனமாடிக் கொண்டிருந்த விஷ்ணு பகவான் தன்னுடைய தலையில் கையை வைத்து ஆடுவதுபோல் சாதுர்யமாக ஒரு அபிநயம் பிடித்தார். இதைக் கண்டு தன்னிலை மறந்த அசுரன் தன் தலையில் மறதியாக கையை வைக்க கணப் பொழுதில் சாம்பாலகிப் போனான் .

இந்த அசுரனை அழிப்பதற்காக விஷ்ணு பகவான் மோகினியாக உருமாறிய இடம் தான் மோகினி ஷிக்கரா என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் நமக்கு புராணம் கூறும் செய்திகள்.

பைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பைரவேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில்  புனித யாத்ரிகர்களும், பயணிகளும்  கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.

யானா சிறப்பு

யானா வானிலை

சிறந்த காலநிலை யானா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது யானா

  • சாலை வழியாக
    சிர்சி மற்றும் கும்தாவுக்கு அரசுப் பேருந்துகளின் போக்குவரத்து கணிசமாக உள்ளன. எனவே பயணிகள் இங்கு வந்து, பின்னர் ஜீப்களிலேயோ, நகராட்சி பேருந்துகளிலேயோ யானாவை அடையலாம். அதுமட்டுமல்லாமல் பெங்களூரிலிருந்து நிறைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் யானாவுக்கு இயக்கப்படுகின்றன. பெங்களூர் யானாவிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    யானாவிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் கும்தா ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகாமை பகுதிகளோடு இணைக்கப்பட்டிருந்தாலும், அடிக்கடி ரயில் போக்குவரத்து இருக்காது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஹூப்ளி விமான நிலையம் யானாவிலிருந்து 102 கிலோமீட்டரில் உள்ளது. அதே போல் யானாவிலிருந்து 181 கிலோமீட்டரில் அமைந்திருக்கும் கோவா விமான நிலையத்தையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat