Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யானம் » வானிலை

யானம் வானிலை

யானத்திற்கு பயணம் செய்ய சிறந்த சீசன் குளிர்காலமே. பயண திட்டங்களை சீர்குலைக்காத அளவுக்கு தட்பவெப்பம் இக்காலகட்டத்தில் நிலவுகின்றது. குளிர்ச்சியான காற்றின் காரணமாக வானிலையும் இனிமையாக இருக்கிறது. யானத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகின்றது. இவ்விடத்திற்கு பயணம் செய்ய ஆண்டின் சிறந்த காலகட்டம் இதுவே.

கோடைகாலம்

கோடை வெப்பம் 27 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை உஷ்ணம் அதிகரிக்கிறது, பிறகு தென்மேற்கு பருவ மழையின் போது வெப்பம் சற்று குறைகின்றது. இந்த காலகட்டத்தில் யானத்திற்கு பயணம் செய்வது பரிந்துரைக்கப்படுவது இல்லை.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் மழைக்காலம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. மழைக்காலம்  தொடங்கியதும் வெப்பம் குறைகின்றது. மழைக்காலத்திற்கு முன்பு யானத்தில் இடியுடன் கூடிய மழை பொழிவது வழக்கம். இக்காலகட்டத்தின் சராசரி தட்பவெப்பம் 32 டிகிரி செல்சியஸ்.

குளிர்காலம்

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் யானத்தில் குளிர்காலம் நிலவுகின்றது. இரவு நேர தட்பவெப்பம் 19 டிகிரி செல்சியசுக்கும், பகல் நேர தட்பவெப்பம் 27 டிகிரி செல்சியசுக்கும் குறைகின்றது. இவ்விரண்டு மாதங்களே குளிர்ச்சியான மாதங்கள். இக்காலகட்டத்தில் யானத்திற்கு பயணம் செய்வது சிறந்தது.