Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏலகிரி » வானிலை

ஏலகிரி வானிலை

ஏலகிரியின் தட்பவெப்பம் வருடம் முழுவதும் மிதமானதாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் . இருப்பினும், ஏலகிரிக்கு வர சிறந்த சமயம் குளிர்காலம் தான். நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்தக் காலம் குளுமையாகவும் இனிமையானதாகவும்  இருக்கும். இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு கோடை விழா நடைபெறும் மே மாதம் இங்கு வர சிறந்த சமயமாக இருக்கும்.  

கோடைகாலம்

கோடைகாலம் மார்ச் முதல் ஜூன் வரை காணப்படும். தட்பவெப்பம் 18 டிகிரி முதல் 34 டிகிரி வரை காணப்படும். இந்த மாதங்களில் மூன்று நாட்கள் நடைபெறும் கோடைத் திருவிழா பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் அம்சமாகும்.

மழைக்காலம்

ஏலகிரியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை மழை பொழிகிறது. மழைப்பொழிவு அதிகமாக இல்லாமல் சராசரியாக இருக்கிறது. இருப்பினும் இந்த சமயத்தில் இங்கு வருவது உசிதமல்ல. ஏனென்றால் மழையின் காரணமாக் சுற்றிப் பார்ப்பதும் மலையேற்றமும் தடைபடலாம்.

குளிர்காலம்

குளிர்காலம் டிசம்பரில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. தட்பவெப்பம் 11 டிகிரி முதல் 25 டிகிரி வரை காணப்படுகிறது. குளிர் காலம் குளுமையாகவும் இனிமையானதாகவும் இருப்பதால் இதுவே ஏலகிரிக்கு  செல்ல சிறந்த காலமாகும். சுற்றிப்பார்க்கவும் மலையேறவும் இந்த சமயம் உகந்ததாக இருக்கும்.