Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » எல்லாபூர் » வானிலை

எல்லாபூர் வானிலை

பொதுவாக மழைக்காலத்திற்கு பின்னர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் எல்லாபூர் மற்றும் அதன் அருகாமை சுற்றுலாத்தலங்களை பார்க்க ஏற்றவை.

கோடைகாலம்

(மார்ச்சிலிருந்து மே வரையில்): கோடையில் எல்லாபூர் பகுதி மிகுந்த வெப்பமடைந்து காணப்படுவதால் மிகுந்த அசௌகரியத்தை தரக்கூடியது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை பகலில் 400c யாக உயர்ந்தும் இரவில் 220c யாக குறைந்தும் காணப்படும். ஆகவே பயணிகள் முடிந்தவரை கோடைக்காலத்தில் எல்லாபூருக்கு பயணம் செல்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாத்த்தில் இப்பகுதி மிகுந்த வெப்பத்துடன் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம்

(ஜூனிலிருந்து செப்டம்பர் வரையில்): மழைக்காலத்தின்போது எல்லாபூர் பகுதியில் கடும் மழை பொழிவதால் இக்காலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கான பயணவசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். மழையில் வெளியில் செல்வதும் இயலாதது என்பதால் மழைக்காலம் எல்லாபூர் பகுதிக்கு செல்வது ஏற்றதல்ல. மேலும் வெப்பநிலையும் மிகக்குறைந்து குளிர் அதிகமாகவும் காணப்படும்.

குளிர்காலம்

(டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை): குளிர்காலத்தின்போது எல்லாபூர் பகுதியின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100c ஆகவும் அதிகபட்சம் 220c ஆகவும் இருப்பதால் இந்த காலகட்டம் இங்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள மிகவும் ஏற்றதாகும்.