அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களை உள்ளிட்ட பருவம் அதிலாபாத் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலங்களில் மட்டுமே வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவை மிதமாகவும், குறைந்தும் காணப்படுகிறது. மேலும், குளிர்காலத்தில் இரவு நேரக்குளுமை அதிகரிக்கக்கூடும் என்பதால் குளிருக்கேற்ற உடைகளுடன் பயணிப்பது சிறந்தது.
அதிலாபாத் நகரப்பகுதியில் கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் ஈரப்பதம் போன்றவை இக்காலத்தில் நிலவுகிறது. மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்கள் இங்கு கோடைப்பருவமாகும். இவற்றில் மே மற்றும் ஜூன் மாதத்தில் 45° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. அதிக வெப்பநிலை நிலவும் கோடைக்காலம் ஆதிலாபாத் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள நிச்சயமாக ஏற்றதல்ல.
அதிலாபாத் நகரப்பகுதியில் ஜுலை மாத மத்தியில் துவங்கும் மழைக்காலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரை நீள்கிறது. இக்காலத்தில் மிகக்குறைவான மழைப்பொழிவையே இப்பகுதி பெறுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் அணைகள் மற்றும் கால்வாய் பாசனத்தை நம்பியுள்ளனர். மழைக்காலம் இப்பகுதியின் வெப்பநிலையை குறைத்தாலும் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது.
இந்தியாவின் வட மாநிலங்களைப்போல் அல்லாது அதிலாபாத் நகரப்பகுதி மிதமான குளிர்காலத்தையே பெற்றுள்ளது. நவம்பர் மாத இறுதியில் துவங்கி பிப்ரவரி மாத இறுதி வரை இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. இனிமையான சூழலை கொண்டுள்ள குளிர்காலத்தில் மதிய நேரங்களில் மிதமான உஷ்ணமும் மாலை நேரங்களில் குளுமையும் நிலவுகிறது. இரவு நேரத்தில் இன்னும் வெப்பநிலை குறைந்து காணப்படும்.