அஹமத்நகரில் கோடைக்காலம் மிகுந்த உஷ்ணத்துடன் காணப்படுகிறது. மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நிலவும் கோடைக்காலத்தில் வெப்பநிலை மிகக்கடுமையான 40°C வரை காணப்படுகிறது.
கோடைக்காலத்தின் மிதமிஞ்சிய உஷ்ணத்தை குறைக்கும் வகையில் வருகை தரும் மழைக்காலம் அஹமத்நகரில் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறது. அஹமத்நகர் பகுதி முழுவதும் இக்காலத்தில் இயற்கை எழிலுடன் திகழ்கிறது. மழையை விரும்புகின்றவர்கள் இக்காலத்தில் அஹமத்நகரை சுற்றி பார்க்க வருகை தரலாம்.
அஹமத்நகரின் குளிர்காலம் சற்றே நீண்டதாக அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை நிலவுகிறது. குளுமையான மற்றும் உலர்ந்த சூழலும் அச்சமயம் நிலவுகிறது. சராசரி வெப்பநிலை 22°C என்ற அளவில் காணப்படுகிறது. மேலும் இரவில் வெப்பநிலை சற்று குறைந்தும் இருக்கும்.