Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிபாக் » வானிலை

அலிபாக் வானிலை

அலிபாக் கடற்கரை ஸ்தலம் வருடத்தின் எல்லா நாட்களிலும் எல்லா பருவங்களிலும் விஜயம் செய்ய ஏற்றது என்றே சொல்லலாம். இருப்பினும் கோடைக்காலத்தின் வெப்பம் சில பழக்கமில்லாத பயணிகளுக்கு அசௌகரியமாக தோன்றலாம். ஆகவே குளிர்காலமே அலிபாக்கிற்கு விஜயம் எல்லாவிதத்திலும் ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூலை மாதம் வரை அலிபாக் பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. இப்பருவத்தில் இங்கு சீதோஷ்ணநிலை ஆரோக்கியமாகவும் விரும்பத்தக்கதாகவும் காணப்படுகிறது. கோடையில் அதிகபட்ச வெப்பநிலையாக 36°C வரை உள்ளது. சுற்றுலா என்று பார்க்கும்போது இது பெரும்பாலான பயணிகளால் சகித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு உள்ளது எனலாம்.

மழைக்காலம்

அலிபாக் பகுதியில் கணிசமான மழைப்பொழிவு காணப்படுகிறது. அதன் காரணமாக மழைக்காலத்தில் இப்பகுதி கூடுதல் அழகுடன் மிளிர்கிறது. கடும் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் இக்காலத்தில் சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் மழைக்காலத்தின்போது அலிபாக் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

குளிர்காலத்தின்போது அலிபாக் பகுதியில் வெப்பநிலை அதிகபட்சம் 30°C ஆகவும் குறைந்தபட்சம் 12°C ஆகவும் காணப்படுகிறது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது அதிக அளவில் பயணிகள் அலிபாக் கடற்கரைப் பகுதிக்கு குடும்பத்துடன் வருகை தருகின்றனர். குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கின்றது.