Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலகாபாத் » வானிலை

அலகாபாத் வானிலை

வட இந்தியாவில் உள்ள மற்ற எல்லா நகரங்களையும்போலவே நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருவமே அலாகாபாத் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இதர மாதங்களில் கடும் வெப்பமும் வறட்சியும் நிலவுகிறது. இருப்பினும் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இருப்பதால் அலாகாபாத் நகரம் ஆன்மீக திருவிழாக்காலங்களில் அதிகமான பயணிகள் வருகையை கொண்டிருக்கிறது.  

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : அலாகாபாத் நகரத்தில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் ஜூன் மாதம் வரையில் நீடிக்கின்றது. கோடைக்காலத்தின் உச்சத்தில் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும். உஷ்ணக்காற்றும் இக்காலத்தில் வீசுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அலாகாபாத் நகரத்தில்  மழைக்காலம் நீடிக்கிறது. கடுமையான மழைப்பொழிவு நிலவும் இக்காலத்தின் சூழல் ஈரமாகவும் காற்றில் ஈரப்பதம் நிரம்பியும் காணப்படும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை அலாகாபாத் நகரத்தில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இனிமையான இதமான சூழலுடன் இப்பகுதி காணப்படுகிறது. 12°C முதல் 20°C  வரை இக்காலத்தில் வெப்பநிலை உள்ளது. கடுமையான பனிப்பொழுவும் காணப்படுவதால் ரயில் சேவைகள், விமான சேவைகள் போன்ற போக்குவரத்துச்சேவைகள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.