Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏம்பி பள்ளத்தாக்கு » வானிலை

ஏம்பி பள்ளத்தாக்கு வானிலை

ஏம்பி பள்ளத்தாக்குக்கு வசந்த காலத்திலும் , முன்பனிக் காலத்திலும் சுற்றுலா வருவது சிறந்த அனுபமாக இருக்கும். இந்த இரண்டு பருவத்திலும் ஏம்பி பள்ளத்தாக்கு தங்குவதற்கு ஏற்ற சூழலை கொண்டிருப்பதோடு, எழில் ஓவியம் போலவும் காட்சியளிக்கும். 

கோடைகாலம்

ஏம்பி பள்ளத்தாக்கின் ஏற்றக்கோணமும், அமைவிடமும்  அதை கோடை காலத்தில் அதனருகிலுள்ள பகுதிகளை விட குளிர்ச்சியாகவே வைத்திருக்கிறது. சில சமயம் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரியை நெருங்கும், அப்போது குளிர் சாதன வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மழைக்காலம்

ஏம்பி பள்ளத்தாக்கின் மழைக் காலங்களில் 18 முதல் 23  டிகிரி வரை வெப்ப நிலை நிலவும். சில சமயம் கடுமையான மழைப் பொழிவையும் பார்க்கலாம். ஏம்பி பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 2300 அடி உயரத்தில் இருப்பதால் மழைக் காலங்களில் பார்பதற்கு மிகவும் அழகானதாகவும், வசிப்பதற்கு ஏற்ற இடமாகவும் இருக்கும்.

குளிர்காலம்

ஏம்பி பள்ளத்தாக்கு அதன் குளிர் காலங்களில் குறைந்த பட்ச வெப்பநிலையாக 16 டிகிரி அளவில் இரெட்டிப்பு அழகுடன் காட்சியளிக்கும். எனவே இந்த பருவத்தில் ஏம்பி பள்ளத்தாக்குக்கு சுற்றுலா வருவதையே பெரும்பாலான பயணிகள் விரும்புகின்றனர்.