Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அந்தர்கங்கே » வானிலை

அந்தர்கங்கே வானிலை

அந்தர்கங்கேயை சுற்றிப் பார்க்க சிறந்த காலம் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களே ஆகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : அந்தர்கங்கேயின் கோடை காலங்களில் 22 டிகிரியிலிருந்து 37 டிகிரி வரை வெப்ப நிலை நிலவும். எனவே எப்போதுமே கோடை காலத்தில் பயணிகள் கூட்டம் அந்தர்கங்கெயில் குறைவாகவே காணப்படும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் நவம்பர் வரை) : அந்தர்கங்கேயின் மழைக் காலம் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நீடிக்கும். இங்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கடுமையான மழை பெய்யும். அதே நேரத்தில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவமழையினை அந்தர்கங்கேவுக்கு தருவிக்கும் காலங்களாகும் . அதோடு முன்மழைக் காலமான மே மாதத்திலும் அந்தர்கங்கேயில் மழைப் பொழிவு இருக்கும். ஆகையால் அந்தர்கங்கேயின் மழைக் காலங்களை சுற்றுலாப் பயணிகள் தவிர்ப்பது நல்லது. 

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : அந்தர்கங்கேயின் பனிக் காலம்  டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதத்தில் முடிவடையும். இந்த காலங்களில் அந்தர்கங்கேயில் அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 19 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.