ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள அர்கீ நகரத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா அம்சம் இந்த அர்கீ கோட்டையாகும். ராணா பிருத்வி சிங் மன்னரால் 1695 மற்றும் 1700 ஆண்டுகளுக்கு இடையில் இது கட்டப்பட்டிருக்கிறது.
இந்த கோட்டையை கேந்திரமாக கொண்டு கூர்க்கா இனத்தார் 1815ம் ஆண்டுவரை ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகிறது. அர்கீ கோட்டை ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலை அம்சங்களை கலந்து கட்டப்பட்டிருக்கிறது.
இந்த கோட்டையில் பஹாரி பாணியில் வரையப்பட்டிருக்கு சுவர் ஓவியங்களை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கலாம். இந்த ஓவியங்கள் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. இந்த கோட்டையின் ஒருபகுதி தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications