ஜக்கோளி தேவி என்றும் அழைக்கப்படும் இந்த பத்ரகாளி கோயில் அர்கீ நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்துள்ளது. 1650 ம் ஆண்டில் ஷிகரா பாணி கோயிற்கலை அம்சங்களுடன் நுணுக்கமான அலங்கார வடிவமைப்புகளுடன் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
அர்கீயிலுள்ள மூன்று முக்கியமான கோயில்களில் ஒன்றான இது ஹிமாச்சல் பிரதேசத்தின் சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது. துர்க்கா தேவியின் உக்கிரமான அவதாரமான காளிக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
வருடம் முழுதும் ஏராளமான யாத்ரீகர்கள் காளிதேவியை தரிசிப்பதற்காக இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். பரவலான நம்பிக்கைகளின்படி, இந்த கோயிலுக்கு விஜயம் செய்தால் உள்ளத்தில் சாந்தி நிலவுவதோடு வேண்டுதலும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications