படல் காட்டி மற்றும் அர்கீ நகரத்திற்கு இடையே இந்த துர்க்கா கோயில் எனப்படும் முக்கியமான யாத்ரீகஸ்தலம் அமைந்துள்ளது. சக்தியின் அடையாளமாக விளங்கும் தெய்வ அவதாரமான துர்க்கா தேவிக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியின்போது இந்த கோயில் ஒரு சந்தைத்திருவிழாவையும் நடத்துகிறது. ஷிகரா பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் லுட்டுரு மஹாதேவ் கோயிலுக்கு நேர் எதிரிலேயே அமைந்துள்ளது. இந்த கோயில் ஸ்தலத்திலிருந்து சுற்றியுள்ள எழிற்பிரதேசங்களின் அழகை நன்கு பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications