ஒவ்வொரு வருடமும் அஷ்வின் சங்கராந்தியின்போது சைர் ஃபேர் எனப்படும் இந்த பிரசித்தமான சந்தைத்திருவிழா நடத்தப்படுகிறது. இது செப்டம்பர் மாதத்தில் இடம்பெறுகிறது.
பனார் தேவ்தாவுக்காக நடத்தப்படும் இந்த திருவிழாவின்போது பாட்டு, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. சைர் ஃபேர் திருவிழாவின் முக்கிய அம்சமாக எருமைச்சண்டை நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மக்களால் பயிற்சி அளிக்கப்பட்ட எருமைகள் ஒன்றோடொன்று மோதவிடப்படுகின்றன. இந்த எருமைச்சண்டையை பார்ப்பதற்கு ஒவ்வொரு வருடமும் ஏராளமான பார்வையாளர்களும் பிரபல்யங்களும் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications