ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள அர்கீ நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த ஷாக்னி மஹாதேவ் கோயில் பெயர் பெற்று விளங்குகிறது. அர்கீ நகரத்தின் மூன்று முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
ஜக்கோலி கோயில் மற்றும் லுட்டுரு மஹாதேவ் கோயில் என்பவை இதர இரண்டு கோயில்களாகும். சிவபெருமானுக்கான இந்த கோயில் ஷிகார பாணியில் இணையற்ற கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கம்பீரமான இமயமலைத்தொடரில் ஒரு உயரமான மலையில் வீற்றிருக்கும் இக்கோயிலிலிருந்து பயணிகள் அருமையான மலைஎழிற்காட்சிகளை தரிசிக்கலாம். அதிர்ஷ்டத்தை தரும் கோயில் என நம்பப்படுவதால் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications