Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔந்தா நாகநாத் » வானிலை

ஔந்தா நாகநாத் வானிலை

கோடைகாலம்

ஔந்தா பகுதியில் கோடைக்காலம் அதிக வெப்பம் மற்றும் வறட்சியுடன் காணப்படுகிறது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவும் கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 40°C  வரையும், குறைந்தபட்சமாக 22°C  அளவிலும் காணப்படுகிறது. குறிப்பாக மே மாதத்தில் வெப்பம் கடுமையாக இருப்பதால் இக்காலத்தில் பயணிகள் இங்கு வருகை தராமல் இருப்பது நல்லது. அதிக வெப்பம் நிலவும் கோடைக்காலமானது ஔந்தாவுக்கு பயணம் மற்றும் சுற்றுலா மேற்கொள்வதற்கு  தவிர்க்கப்பட வேண்டிய காலமாக உள்ளது.

மழைக்காலம்

ஜுலையில் ஆரம்பித்து ஆகஸ்ட் மற்றும்  செப்டம்பர் வரை ஔந்தா பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் மிதமான மழையையே  இப்பிரதேசம் பெறுகிறது. மழைக்காலத்தை  விரும்பும் பயணிகள் இக்காலத்தில் ஔந்தா நாகநாத் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

ஔந்தா பகுதியில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மிதமான குளிர்காலம் நிலவுகிறது. இக்குளிர்காலத்தில் மிக அதிகபட்ச வெப்பநிலை 33°C ஆகவும்,  குறைந்தபட்சமாக 17°C  அளவிலும் காணப்படுகிறது. சூழலும் சீதோஷ்ணநிலையும் இதமாக உள்ளதால் குளிர்காலம் ஔந்தா பகுதிக்கு பயணம் செய்ய ஏற்றதாக உள்ளது.