பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்க்க வருடத்தின் எந்த காலங்களிலும் பயணிகள் வரலாம். அதிலும் குறிப்பாக செப்டம்பரிலிருந்து, ஜனவரி வரையிலான பருவங்களில் சுற்றுலா வருவது சிறப்பானதாக இருக்கும்.
(மார்ச் முதல் மே வரை) : பன்னேர்கட்டாவின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 34 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் நிலவும் மிதமான வெப்பநிலை காரணமாக பன்னேர்கட்டாவுக்கு சுற்றுலா வர பெரும்பாலான பயணிகள் விரும்புவர்.
(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : பன்னேர்கட்டாவின் மழைக் காலங்களில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக மிதமான மற்றும் கனமழை பெய்யும். எனவே பசுமையை நேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் இந்த காலங்களில் பன்னேர்கட்டாவுக்கு வருவது சிறப்பாக இருக்கும்.
(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : பன்னேர்கட்டாவின் பனிக் காலங்களில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 11 டிகிரி வரை காணப்படும். எனவே இந்த காலங்களில் பன்னேர்கட்டாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அதன் இதமான வெப்பநிலை மகிழ்வூட்டுவதாக அமையும்.