Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» பன்னேர்கட்டா

பன்னேர்கட்டா - தொழிற்நுட்ப நகரத்துக்கு அருகில் ஓர் இயற்கை பிரதேசம்

10

நீங்கள் பெங்களூர் வாசியாக இருந்தால், உங்களுடைய வார இறுதி நாட்களை குதூகலமாக கழிப்பதற்கான ஒரு சிறந்த இடமாக பன்னேர்கட்டா  உயிரியல் பூங்கா கண்டிப்பாக  இருக்கும்.

உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பயணிகளை ஈர்க்கும் பன்னேர்கட்டா  உயிரியல் பூங்கா கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இது பெங்களூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூர் காட்டுப் பகுதிளின் கீழ் வரும் பன்னேர்கட்டா  பூங்கா 104 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அனிக்கள் தொகுதியின் பாதுகாக்கப்பட்ட பத்து காடுகளில் ஒன்றாகாவும் இது இருந்து வருகிறது.

1971-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த பூங்காவில் மிருகக்காட்சி சாலை, குழந்தைகள் பூங்கா, மீன்கள் காட்சியகம், முதலை பூங்கா, அருங்காட்சியகம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, பாம்பு பண்ணை முதலியவைகளோடு வளர்ப்பு பிராணிகளுக்கான தனி இடமும் இருக்கிறது.

பன்னேர்கட்டா  உயிரியல் பூங்கா, புலி மற்றும் சிங்கங்களுக்காக பிரபலமானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பூங்காக்காளில் சிங்கங்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் பூங்காக்களில் பன்னேர்கட்டா  ஒன்று.

இங்கு வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் சவாரி செய்து  புலி, சிங்கங்களோடு நீங்கள் மற்ற விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.

பன்னேர்கட்டா  உயிரியல் பூங்காவை ஒட்டி நீல வாக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஸ்வர்ணமுகி ஓடை பூங்காவின் அழகுக்கு அழகு சேர்க்கக் கூடியது. இந்த ஓடை புகழ் பெற்ற விஷ்ணு கோயிலான சம்ப்பக தாம சுவாமி ஆலயம் அமைந்திருக்கும்  ஸ்வர்ணமுகி குன்றிலிருந்து உற்பத்தியாகிறது.

பன்னேர்கட்டா சிறப்பு

பன்னேர்கட்டா வானிலை

சிறந்த காலநிலை பன்னேர்கட்டா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பன்னேர்கட்டா

  • சாலை வழியாக
    பெங்களூரிலிருந்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறைய எண்ணிக்கையில் பன்னேர்கட்டாவுக்கு இயக்கப்படுகின்றன. அதோடு பயணிகள் பெங்களூர் விமானம் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து வாடகை கார்களின் மூலம் பன்னேர்கட்டாவை வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பெங்களூர் ரயில் நிலையம் பன்னேர்கட்டாவிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையம் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பெருநகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பெங்களூர் விமான நிலையம் பன்னேர்கட்டாவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து இந்தியா மற்றும் உலகின் அனைத்து பெருநகரங்களுக்கும் விமான போக்குவரத்து சீராக உள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் சுலபமாக பன்னேர்கட்டாவை வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu