Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பார்மேர் » வானிலை

பார்மேர் வானிலை

கடுமையான கோடைக்கு பின் வரும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான பருவம் குளுமையுடனும் மற்றும் இனிமையான சூழலுடனும் காணப்படுவதால் இது பார்மேர் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற பருவமாகும். மார்ச் மாதத்தின் போது கொண்டாடப்படும் தார் பாலைவனத் திருவிழாவின் போது ஏராளமான பயணிகள் இங்கு திரள்வதும் குறிப்பிடத்தக்கது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே மாதம் வரை): கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தில் பார்மேர் பிரதேசம் அதிகபட்சமாக 46° C வரையிலான வெப்பநிலையைப் பெறுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 ° C காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): மிகக்குறைவான மழைப்பொழிவையே மழைக்காலத்தில் பார்மேர் பிரதேசம் பெறுகிறது. ஆச்சரியமாக மழைக்காலத்திலும் இப்பகுதி வறட்சியுடன் காட்சியளிக்கிறது. இருப்பினும் தாழ்வழுத்தம் காரணமாக ஒருசில வருடங்களில் கனத்த மழைப்பொழிவுக்கும் வாய்ப்புள்ளது. குறைவான மழைப்பொழிவு காரணமாக இப்பகுதி நாட்டிலுள்ள வறட்சிப்பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): ராஜஸ்தான் மாநிலத்தின் மற்ற பகுதிகளைப்போல பார்மேர் பகுதியில் குளிர்காலத்தில் கடும் குளிர் நிலவுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குளுமையான பருவநிலை நிலவும் இக்காலத்தில் குறைந்தபட்சம் 10° C முதல் அதிகபட்சம் 36° C வரை வெப்பநிலை நிலவுகிறது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் குளிர் அதிகமாக உள்ளது.