பருவநிலை மிகவும் மென்மையாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் அக்டோபர், நவம்பர் மாதங்கள் பாகல்பூருக்கு சுற்றுலா சீசன் வந்து விட்டதை பறை சாற்றும் மாதங்களாகும். எனினும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலும் இங்கே சுற்றுலா வருவது சிறந்த அனுவமாக இருக்கும்.
பாகல்பூரில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரையிலும் நீடித்திருக்கிறது. இந்நாட்களில் வெப்பநிலை 25 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கோடைக்காலம் உச்சத்தில் இருக்கும் போது வெப்பநிலை 40 டிகிரிகள் வரையிலும் சென்று விடும்.
பாகல்பூரின் மழைக்காலம் ஜீன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் 30 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை இருப்பதால், இந்நாட்களில் சுற்றுலா வரவும் முடியும். பருவநிலை மிகவும் மென்மையாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாகல்பூருக்கு சுற்றுலா வருவது சிறந்த அனுவத்தைத் தரும்.
இந்நகரத்தின் குளிர்காலம் டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி வரையிலும் நீடித்திருக்கிறது. இந்நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 18 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 11 டிகிரி செல்சியஸும் உள்ளன.