Search
  • Follow NativePlanet
Share

பாகல்பூர் - இந்திய பட்டுத் தொழிலின் சொர்க்கம்!

28

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாக பாகல்பூர் உள்ளது. இம்மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும், சிறப்பாக வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகரமாகவும் இது உள்ளது. இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள பாகல்பூர் பற்றி 7-ம் நூற்றாண்டுகளிலிருந்தே வரலாற்று தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒரு காலத்தில் துறைமுகமாக இந்நகரம் செயல்பட்டு வந்ததை, இங்கு நடந்த அகழ்வாய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட நாணயங்கள் மற்றும் படகுகளைக் கொண்டு அறிய முடிகிறது.

இவை மத்திய கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளின், பல்வேறு காலகட்டத்தைச் பொருட்களாகும். இந்திய கலாச்சாரத்திற்கே உரித்தான பல்வேறு சிறந்த பண்டிகைகள் உள்ள இடமாக பாகல்பூர் உள்ளது.

மேலும், முகரம் பண்டிகையும் பெருவாரியாக கொண்டாடப்படும் இடமாக இது உள்ளது. 'பாகல்பூர்' என்ற பெயர் 'நல்ல அதிர்ஷ்டம்' என்று பொருள் தரும் 'பாக்தாத்புரம்' என்ற பெயரிலிருந்து வந்ததாகும்.

இந்த இடத்தின் சிறப்பான அமைப்பிற்காகவே, கங்காஜல், ரெயின்கோட், கேங்ஸ் ஆப் வாஸ்ஸிபூர் - 2-ம் பாகம் ஆகிய பாலிவுட் திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.

பாகல்பூரை, பாட்னா மற்றும் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் 80-வது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறே புனித கங்கை நதி ஓடிக் கொண்டிருப்பது  பிரமாதமான சுற்று வட்டக் காட்சியாக இருக்கும்.

வளமான ஆற்றின் கரையில் உள்ள வெண்மையான கரைகளில் அமைந்துள்ள பாகல்பூரில் அபரிமிதமான அளவு மாம்பழ மரங்கள், இட்சி மரங்கள் மற்றும் மக்காச்சோள தோட்டங்கள் ஆகியவை பரந்து விரிந்திருக்கின்றன. மேலும், ஆற்றின் கரைகளில் செங்கல்களை உருவாக்கும் சூளைகளும் அதிகளவில் உள்ளன.

பாகல்பூரை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாப் பயணிகள் காணத்தகுந்த பல்வேறு இடங்களை பாகல்பூர் கொண்டுள்ளது. லஜ்பத் பூங்கா, புத்தாநாத்தில் உள்ள சிவன் கோவில், சம்பாநகர் ஜெயின் கோவில், காந்தகார், குரான் பாபா தர்ஹா, ரபீந்திர நாத் பவன், தேஜ் பகதூர் குருத்துவாரா, சன்டிஷ் வளாகம், காளி மற்றும் துர்கா கோவில், ராஜ்மஹால் பாசில் சரணாலயம் மற்றும் சஞ்சய் உதியன் பூங்கா ஆகியவை பாகல்பூரில் உள்ள முக்கியமான பார்வையிடங்களாகும்.

பாகல்பூர் பட்டு

பல்வேறு தலைமுறைகளாகவே பட்டு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் மக்களை கொண்ட இடமாக இருப்பது பாகல்பூரின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். ஏற்கனவே சிறப்பாக உள்ள பட்டு நெய்தல் தொழிலை இன்னும் மேம்படுத்தும் பொருட்டாக அரசும் பல்வேறு பட்டு தொழில்நுட்ப நிலையங்களை உருவாக்கியுள்ளது.

200 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பாகல்பூர் பட்டு உற்பத்தி நிலையங்கள், பட்டுப் பூச்சி வளர்ப்பிற்கு (Sericulture) மிகவும் புகழ் பெற்ற இடங்களாகும். பாகல்பூர் பட்டு டுஸ்ஸா அல்லது டுஸ்ஸார் பட்டு என்று அழைக்கப்படுகிறது.

பாகல்பூரை அடையும் வழிகள்

முக்கியமான நகரங்கள் மற்றும் பெருநகரங்களுடன் நல்ல போக்குவரத்து தொடர்பில் இருக்கும் பாகல்பூர் நகருக்கு டாக்ஸிகள் மற்றும் பேருந்துகளில் வரலாம். இரயில் சேவைகளும் பாகல்பூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

பாகல்பூர் நிர்வாகம், அதன் போக்குவரத்து வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் ஏற்றதாகவும் வைத்திருப்பதை உறுதி செய்துள்ளது.

பாகல்பூர் சிறப்பு

பாகல்பூர் வானிலை

சிறந்த காலநிலை பாகல்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பாகல்பூர்

  • சாலை வழியாக
    விக்ரம்ஷீலா சேதுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளான 80 மற்றும் 31-வது நெடுஞ்சாலைகள் மூலம் பாகல்பூரை அடைந்திட முடியும். இந்நகரத்தில் சிறந்த சாலை வசதிகள் உள்ளன. பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஆகியவை இங்கே எளிதில் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மிகவும் நன்றாக இணைக்கப்பட்டிருக்கும் பாகல்பூர் இரயில் நிலையம், ஒரு முதல் தரமான இரயில் நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாகல்பூர் இரயில் நிலைய்த்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, அஜ்மீர், கான்பூர், பாட்னா, கௌகாத்தி, சூரத், கயா மற்றும் பல இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பாகல்பூரில் விமான நிலையம் இல்லாததால், அருகிலுள்ள நகரங்களின் விமான நிலையங்களையே நம்பி இருக்க வேண்டும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat