சாந்தி நிகேதன் - வேறெங்கும் காண முடியாத பாரம்பரியம்!

மேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும் இடமாகும்.

நோபல் பரிசு பெற்ற இரபீந்தரநாத் தாகூரால் இங்கு உருவாக்கப்பட்ட சாந்தி நிகேதன் பன்னாட்டு பல்கலைக்கழகம், மேற்கத்திய அறிவியலுடன் கிழக்கின் கலாச்சாரமும், பாரம்பரியமும் போட்டியிடும் இடமாக உள்ளது.

வீடு என்று பொருள்படும் நிகேதன் என்ற வார்த்தையும், அமைதி என்று பொருள்படும் சாந்தி என்ற வார்த்தையும் இணைந்து பெயரிடப்பட்டிருக்கும் இந்த இடம் பசுமை பூத்துக் குலுங்கும் நிலமாகும்.

இந்திரா காந்தி, சத்யஜித் ரே, காயத்ரி தேவி, நோபல் பரிசு பெற்றவரான அமர்தியா சென் மற்றும் அப்துல் கானி கான் ஆகிய புகழ் பெற்ற மனிதர்கள் இங்கு வந்ததன் காரணமாக, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பாரம்பரியம் மிக்க மையமாக சாந்தி நிகேதன் உள்ளது.

வேகமாக வளர்ச்சியடைந்த கலை, நடனம்மற்றும் கலாச்சாரதின் மையமாக இருக்கும் சாந்திநிகேதன் கலாச்சார மையத்தை காணத் தவறாதீர்;கள்.

சாந்தி நிகேதன் பற்றிய சுவையான தகவல்கள்

எல்லா நேரங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்களைக் கொண்டிருக்கும் சாந்தி நிகேதனில் எப்பொழுதுமே கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

இரபீந்திரநாத் தாகூரின் ஆண்டுவிழா ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இங்கே நடத்தப்பட்டு வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 22 மற்றும் 23-ம் நாட்களில் இங்கே மரங்களை நடும் பிரிக்ஷாரோபன் திருவிழாவும் இங்கே நடத்தப்படுகிறது, மேலும் வர்ஷாமங்கல் என்ற மழைத்திருவிழாவும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

பிரம்மா மந்திர் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக பாவ்ஸ் உத்சவ் என்ற விழாவும் சாந்தி நிகேதனில் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நாட்டுப்புற நடனம், இசை, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தொல்பொருள் தொடர்பான நிகழ்வுகள் சாந்தி நிகேதனில் முழுவேகத்துடன் நடந்து கொண்டிருக்கும்.

இவை மட்டுமல்லாமல் மகோட்சவ், ஜோய்டேவ் மேளா மற்றும் வசந்த உத்சவ் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளும் இங்கே நடத்தப்படுகின்றன.வங்காள உணவுகளுக்கு புகழ் பெற்றிருக்கும் சாந்தி நிகேதனின் மீன் குழம்பு மிகவும் ருசியானதாக இருக்கும்.

இங்கிருக்கும் விஸ்வ பாரதியின் மிகப்பெரிய வளாகம் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இரபீந்திரநாத் தாகூரின் தந்தையான மஹரிஷி தேவேந்திரநாத் இங்கிருக்கும் பட்டமளிப்பு மையத்தில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தியுள்ளர்.

பட்டமளிப்பு விழாவின் போது, ஒவ்வொரு பட்டதாரிக்கும் சப்தபாரினி மரத்தின் ஐந்து இலைகள் தரப்படும். இங்கிருக்கும் நுண்கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கல்லூரியில் கலை புத்தஙகங்கள் மட்டுமல்லாமல் சிற்பங்கள், சுவரோவிங்கள் போன்ற கலைப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

பாத பவன் என்ற இடத்தில் பாரம்பரியமான பிரம்மச்சாரிய ஆசிரமம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இங்கே பிரார்த்தனைகளும் நடத்தப்படும். இங்கிருக்கும் உத்தராயன் வளாகத்தில் தான் மாபெரும் கவியான இரபீந்திரநாத் தாகூர் வசித்து வந்தார்.

சாந்தி நிகேதனின் பிற பார்வையிடங்கள்

சாந்தி நிகேதனுக்கு அருகில் உள்ள வேறு சில இடங்களுக்கும் சுற்றுலா செல்ல முடியும். கன்காலிடாலாவில் உள்ள சதிபிதாஸ் மற்றும் சாந்தி நிகேதனுக்கு அருகிலேயே உள்ள மான் பூங்கா (புதன் கிழமை விடுமுறை) ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஜோய்தேவ் - கென்டுலி, கீத கோவிந்தத்தை எழுதியவரின் பிறப்பிடமாகும். ஒன்று நானூர் என்ற இடத்தில் உள்ள தேவி பாசுலி கோவில் மற்றும் பர்கெஸ்வரில் உள்ள வெந்நீர்; ஊற்றுகள் ஆகியவையும் சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்க வேண்டிய இடங்களாகும்.

இவையெல்லாம் மட்டுமல்லாமல், தாராபித், லாவ்புர்-புல்லாரா, சாய்ந்தா – நந்தேஸ்வரி, நல்ஹாடி மற்றும் மாஸ்ஸஞ்சோர் ஆகிய இடங்களில் உள்ள சதிபிதாஸ் மற்றும் கோவில்களுக்கும் செல்லலாம்.

சாந்தி நிகேதனை அடையும் வழிகள்

சாந்தி நிகேதன் இரயில் மற்றும் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சாந்தி நிகேதனுக்கு அருகில் உள்ள விமான நிலையம் கொல்கத்தா விமான நிலையமாகும்.

Please Wait while comments are loading...