அதிலாபாத் – கலாச்சார கதம்ப நகரம்
ஆந்திர மாநிலத்தின் வடமேற்கு எல்லையில் வீற்றிருக்கும் நகராட்சி நகரமான அதிலாபாத் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் இயங்குகிறது. உள்ளூர் வரலாற்று கதைகளின்படி முகமது அதில் ஷா எனும் பீஜாப்பூர் ராஜவம்ச மன்னரின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பல்வேறு கலாச்சார......
அகர்தலா–அரண்மனைகள் மற்றும் கோயில்களின் அழகு நகரம்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ‘அகர்தலா நகரம்’ கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை மற்றும் நகர நிர்வாகப்பரப்பு ஆகியவற்றை பொறுத்து இது இப்பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.......
ஆக்ரா – தாஜ் மஹாலுக்கும் அப்பாற்பட்ட மஹோன்னத வரலாற்று மாநகரம்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் வீற்றிருக்கும் இந்த புராதன நகரத்தில் தாஜ்மஹால் மட்டுமல்லாது இன்னும் இரண்டு யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய ஸ்தலங்களும்......
அஹமதாபாத் – வளர்ந்து வரும் நவீனப்பெருநகரம்
முரண்களின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு ஒன்றுக்கொன்று எதிரான பல அம்சங்களை அஹமதாபாத் நகரம் கொண்டுள்ளது. ஒரு புறம் பொருள் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்ட குஜராத்தி வணிகர்கள் உதித்த பூமி என்றால் மறு புறம் பொது நலனை வலியுறுத்திய காந்திஜியும் இப்பகுதியில் தோன்றியுள்ளார் என்பதும் ஒரு வியப்புக்குரிய......
அஹமத்நகர் - இயற்கை எழிலின் பின்னணியில் வரலாற்று கதை கேட்க வாருங்கள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் அஹமத்நகர் மாவட்டத்தில் அஹமத்நகர் எனும் இந்த நகரம் அமைந்துள்ளது. சினா ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அஹ்மத்நகர் மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே பெரிய மாவட்டமாகும். அஹமத்நகர் நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் மும்பை மற்றும் புனே போன்ற......
அய்சால் – மலைவாழ் மக்களின் பூமி
இந்தியாவின் கிழக்குப்பகுதியில் எட்டு மாநிலங்களின் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் தலைநகரம்தான் இந்த ‘அய்சால்’ நகரம். செங்குத்தான மலைப்பிளவுகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கிடையே இந்த அய்சால் நகரம் வீற்றிருக்கிறது. 100 ஆண்டு கால பழமையை கொண்ட இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 1132 மீ......
அஜ்மீர் – வரலாற்றின் தடயங்கள் பொதிந்த நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஆரவல்லி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பழமை வாய்ந்த தாராகர் கோட்டை அஜ்மீர்......
அலிகார் - பூட்டுகளால் வரலாற்றை கட்டியுள்ள நகரம்!
இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்திலுள்ள அலிகார் மாவட்டத்தில் அலிகார் நகரம் அமைந்துள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உட்பட, முக்கியமான பல கல்வி நிலையங்களை கொண்டிருக்கும் கல்வி மையமாக இந்நகரம் விளங்குகிறது. நீண்ட வரலாற்றைப் கொண்டிருக்கும் அலிகாரில் தான், ஆங்கில......
அலகாபாத் – திரிவேணி சங்கம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். ஹிந்துக்களின் முக்கியமான யாத்ரீக நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஒரு முக்கியமான பங்களிப்பையும் இது கொண்டிருக்கிறது. பிரயாக் அல்லது பிரயாகை என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம்......
ஆலப்புழா – கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்
‘ஆலெப்பி’ என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா’ உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்’ என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது. ஆலப்புழாவின் மனம் மயக்க......
அலாங் - பள்ளத்தாக்குகளுடன் சேர்ந்து விளையாடுவோம்!
அருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் யொம்கோ மற்றும் ஸிபு என்கிற இரண்டு ஆறுகளின் கரைகளில் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆறுகளும்......
ஆலுவா - திருவிழாக்களின் கொண்டாட்டங்களில் தொலைந்து போங்கள்!
ஆலுவா நகரம் சிவராத்திரியின் போது அதன் சிவன் கோயிலில் 6 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி திருவிழாக்காக மிகவும் புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த திருவிழாவை காண கேரளாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலுவா நகரத்தை நோக்கி படையெடுத்து வருவது போல்......
அல்வர் – அற்புத அம்சங்களின் கதம்பம்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய தேஷ் என்றழைக்கப்பட்ட இந்த இடத்தில் மஹாபாரத பாண்டவர்கள் 13 ஆண்டு அஞ்ஞாதவாசத்தை கழித்ததாக நம்பப்படுகிறது.......
அம்பாஜி - அன்னை சக்தியின் உறைவிடம்!
அம்பாஜி பண்டைய இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 52 சக்திபீடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சக்தி பீடங்கள் சதி அல்லது அன்னை சக்தியை வழிபடும் சாக்த உபாகர்களுக்கு மிக முக்கியமான புனித தலமாகும். அம்பாஜி மாதாவின் பீடம்......
அம்பாலா - இரட்டை நகரத்தில் ஒரு சுற்றுலா!
அம்பாலா, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரத்தை அம்பாலா நகரம் மற்றும் அம்பாலா கண்டோன்மெண்ட் என்று அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கலாம். இதில் அம்பாலா கண்டோன்மெண்ட் என்பது அம்பாலா நகரத்தில் இருந்து சுமார் 3 கீ.மீ தொலைவில் உள்ளது. அம்பாலா நகரம் கங்கை மற்றும்......
அம்பாசமுத்திரம் - இயற்கை அன்னையின் உயிர் நாடி!
அம்பாசமுத்திரம் - தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம். தாமிரபரணி ஆறு ஓடும் இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் துணை நகரமான கல்லிடைகுறிச்சி தாமிரபரணி ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ளது. மொத்தத்தில் இது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான......
ஏம்பி பள்ளத்தாக்கு - தனித்துவமான தோற்றம்
ஏம்பி பள்ளத்தாக்கு எனும் இந்த உன்னத படைப்பு முழுக்க முழுக்க சஹாரா குழுமத்தின் மூளையால் உருவானது. எப்போது இப்படி ஒரு திட்டம் முன்மொழியப்பட்டதோ, அப்போதிருந்து எண்ணற்ற மாறுபட்ட கருத்துக்களும், திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டே வந்தன. இந்த திட்டத்துக்காக......
அம்ராவதி - தேவாதி தேவர்களின் நகரம்!
அம்ராவதி எனும் பெயருக்கு அமரத்துவம் பெற்ற தேவர்களின் நகரம் என்பது பொருளாகும். இது மஹராஷ்டிரா மாநிலத்தின் வட எல்லையின் மையத்தில் அமைந்துள்ளது. தக்காண பீடபூமியில் அமைந்திருக்கும் இந்த நகரம் டப்பி சமவெளியில் இடம் பெற்றிருக்கிறது. இதன் கிழக்குப்பகுதியில் சில இடங்கள் வார்தா பள்ளத்தாக்கிலும்......
அம்ரித்ஸர் – தங்கக்கோயில் வீற்றிருக்கும் ஆன்மீக தொட்டில்!
வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தின் பெயரில்தான் இந்த நகரமும் அழைக்கப்படுகிறது. நான்காவது சீக்கிய குருவான குரு ராம்தாஸ்ஜி என்பவர் இந்நகரத்தை......
அனந்த் - டேஸ்ட் ஆஃப் இந்தியா!
அனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக விளங்குகிறது அனந்த். பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியில் அதிகமாக ஈடுபடும் நாடுகளில் இந்தியாவும் இப்புரட்சியால்......
அனந்த்நாக் - நீரூற்றுகளும், ஏரிகளும் நிரம்பிய பள்ளத்தாக்கு!
அனந்த்நாக் மாநகராட்சி, ஜம்மு & காஷ்மீரின் வணிக தலைநகரமாக அறியப்படுகிறது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென் மேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் ஒன்றான அனந்த்நாக் கி.மு. 5000-லேயே வணிக நகரம் என்றளவில் பிரபலமாக விளங்கியது. மேலும் இந்த இடம் அக்காலத்தில்......
அர்கீ – குகைகளும் கோயில்களும் நிரம்பிய மலைபூமி
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலமே இந்த அக்ரீ. மாவட்டத்திலேயே மிகச்சிறிய நகரமான இது சுற்றுலாப்பயணிகளுக்கு சில மயக்கமூட்டும் விசேட அம்சங்களை அளிக்க காத்திருக்கிறது. வரலாற்று ரீதியாக இந்த நகரம் புரதான கால பாகல் மலை ராஜ்ஜியத்தின் தலைநகரமாக......
ஔரங்காபாத் – வரலாற்றின் சாட்சி
சிறந்த முகலாய மன்னர்களில் ஒருவரான ஔரங்கசீப் பெயரில் விளங்கும் இந்த ஔரங்காபாத் மஹாராஷிரா மாநிலத்தின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாகும். ஔரங்காபாத் என்ற பெயரின் பொருள் அரியணையால் கட்டப்பட்டது என்பதாகும். இந்தியாவின் மேற்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஔரங்காபாத் அமைந்துள்ளது.......
அவுரங்காபாத் (பீகார்) - பிஹாரின் ஒளிமிகு நகரம்!
பீகாரின் புகழ்பெற்ற, சிறந்த நகரங்களில் அவுரங்காபாத் ஒன்றாகும். பல குறிப்பிடத்தக்க வரலாற்று சம்பவங்கள் இங்கே நிகழ்ந்ததால் இந்நகர் புகழ்பெற்று விளங்குகிறது, காண்போரை மதிமயக்கச் செய்யும் அழகும், ஒளியும் நிறைந்த நகராகக் கருதப்படுகிறது. இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் இந்நகர் பெரிய......
அயோத்யா - இராமச்சந்திர மூர்த்தியின் அரசாட்சி!
சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய பந்தம் இருப்பதாக நம்பப்படுகிறது. சூர்ய வம்சத்தின் தலைநகரமான அயோத்யாவில் தான் ராமபிரான் பிறந்தார் என்று ராமாயணத்தில்......
பக்தோரா - பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில்!
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான பனி மூடிய இமயமலைகள் மறு புறமும் கொண்டுள்ள இந்த நகரங்கள் ஓய்வெடுக்கவும், வார இறுதி நாட்களை......
பெங்களூர் – இந்தியாவின் புதிய முகம்
பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக பொருந்திக்கொள்ள கூடிய ஒரு நவீன அடையாளம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஒரு குறுநில மன்னராக இருந்த கெம்பே கவுடாவால்......
பாங்குரா - மலைகளும், கோயில்களும்!
மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக இந்த பாங்குரா நகரம் பிரசித்தமடைந்து வருகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நகரத்தின் தனித்தன்மையான அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. மஹாபாரத காவியத்தில்கூட இந்த நகரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கலாச்சார பாரம்பரிய அம்சங்கள்......
பன்ஸ்வாரா – நூறு தீவுகளின் நகரம்
பன்ஸ்வாரா நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது. 5,307 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது செயல்படுகிறது. சராசரியாக 302 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பன்ஸ்வாரா நகரம் ஒரு காலத்தில் மஹரவால் வம்சத்தை சேர்ந்த ஜக்மல் சிங் என்பவரால்......
பாராமதி - விவசாயச் சுற்றுலா
இந்திய தேசத்தின் விவசாயப் பின்புலத்தையும், பெருமையையும் உலக நாடுகளிலிருந்து வரும் பயணிகள் நன்றாகவே அறிவார்கள். அதுவும் இந்தியா போன்ற நாடுகளின் வேளாண் தொழிற்நுட்பத்தை அறிந்து கொள்ளும் தாகத்தோடு பற்பல நாடுகளுக்கு பயணம் செல்லும் பயணிகளின் மத்தியில் தற்போது விவசாயச் சுற்றுலா என்ற சொல்லாடல் மிகவும்......