Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» அவுரங்காபாத் (பீகார்)

அவுரங்காபாத் (பீகார்) - பிஹாரின் ஒளிமிகு நகரம்!

12

பீகாரின் புகழ்பெற்ற, சிறந்த நகரங்களில் அவுரங்காபாத் ஒன்றாகும். பல குறிப்பிடத்தக்க வரலாற்று சம்பவங்கள் இங்கே நிகழ்ந்ததால் இந்நகர் புகழ்பெற்று விளங்குகிறது, காண்போரை மதிமயக்கச் செய்யும் அழகும், ஒளியும் நிறைந்த நகராகக் கருதப்படுகிறது.

இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் இந்நகர் பெரிய பங்காற்றியிருக்கிறது. ராஜேந்திர பிரசாத் பலநாட்கள் தங்கியிருந்த இந்த நகரம்தான் பீஹாரின் முன்னாள் முதல்வரும், சுதந்திரப்போராட்ட தியாகியுமான சத்யேந்திர நாராயண சிங்கின் சொந்த ஊராகும். 

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

புன்புன் போன்ற நதிகளுடன் ஏராளமான இயற்கைக் காட்சிகளைக் இந்நகரம் கொண்டிருக்கிறது. சல்ஹோ, துவாரபல் போன்ற மலைகள் உள்ள இங்கு, ஸ்வஸ்திக், கோமேதகம், கார்னெட் போன்ற விலைமதிப்புள்ள கற்கள் கிடைக்கின்றன.

மேலும் கோவில்கள், நினைவிடங்கள், மசூதிகள் என உள்ளூர் சுற்றுலாதளங்கள் கொண்ட இந்நகரத்தில் போக்குவரத்து வசதிகள் திறம்பட செய்யப்பட்டுள்ளதால் வருடாவருடம் இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது.

அவுரங்காபாதின் கலாச்சாரப் பெருமை மகதம் வரை நீள்கிறது. பேரரசர் அசோகர், சந்திரகுப்த மவுரியர் இவ்விடத்தை ஆட்சி செய்துள்ளனர், இங்கு மகதி, இந்தி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

காயாவில் இருந்து 1972ல் பிரிந்த இந்நகரம் பலவகையான கலாச்சாரங்களைக் கொண்டதாகும். நெல், கோதுமை, கரும்பு ஆகிய பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயத்திற்காக நீர்பாசனம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் விளைச்சலுக்கு ஏற்றவைகளாக இருக்கின்றன.

ச்யவான், பிரிகு போன்ற துறவிகள் பல நாட்கள் இங்கு தங்கி தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஷா ஷத்ருதீன் சூஃபி, சையட் முகமத் அல்கதரி பாக்தாதி, ஷா ஜலாலுதீன் கபிர் பானிபட்டி மற்றும் மொஹமட் சையட் ச்யால்கோட்டி ஆகிய இஸ்லாமிய துறவிகளும் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.

துமுஹனி மேளா என்ற விழா இங்கு கொண்டாடப்படுகிறது. ஓப்ரா என்ற கால்நடைகள் விற்கும் நிறுவனத்தால் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. விரிப்புகள் செய்யும் தொழிலுக்காக புகழ்பெற இந்த ஊர் புன்புன் நதிக்கரையில் உள்ளதால் இந்துக்களுக்கும் புனித நகரமாக கருதப்படுகிறது,

அவுரங்காபாத் அடையும் வழிகள்

உள்நாட்டு பயணிகள் அவுரங்காபாத்திற்கு சுலபமாக பயணிக்கலாம். சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்நகரத்தில் சிறப்பான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண்2 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்98 ஆகிய சாலைகளின் மூலம் இந்நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

அவுரங்காபாத் செல்ல சிறந்த பருவம்

அக்டோபரில் இருந்து மார்ச் வரை மிதமான வானிலை நிலவுவதால் அப்பருவத்தில் பயணிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

அவுரங்காபாத் (பீகார்) சிறப்பு

அவுரங்காபாத் (பீகார்) வானிலை

அவுரங்காபாத் (பீகார்)
38oC / 100oF
 • Haze
 • Wind: WSW 15 km/h

சிறந்த காலநிலை அவுரங்காபாத் (பீகார்)

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது அவுரங்காபாத் (பீகார்)

 • சாலை வழியாக
  சிறப்பான சாலை வசதிகள் உள்ளதால் பேருந்துகள் மற்றும் ரிக்‌ஷாக்கள் இங்கு ஏராளமாக உள்ளன. காயா, போஜ்பூர், பாட்னா ஆகிய நகரங்களில் இருந்து எளிதில் பயணிக்கும் வண்ணம் இந்நகரம் உள்ளது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  சாசரம் ரயில் நிலையம் அவுரங்காபாதில் இருந்து 46கிமீ தொலைவில் உள்ளது.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  அவுரங்காபாத்தில் விமானநிலையம் இல்லாததால் காயா விமான நிலையத்தையே அனைவரும் உபயோகிக்கிறார்கள். தனியார் பேருந்துகள் இங்கிருந்து அவுரங்காபாதிற்கு உள்ளன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
15 Oct,Tue
Return On
16 Oct,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
15 Oct,Tue
Check Out
16 Oct,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
15 Oct,Tue
Return On
16 Oct,Wed
 • Today
  Aurangabad-Bihar
  38 OC
  100 OF
  UV Index: 9
  Haze
 • Tomorrow
  Aurangabad-Bihar
  31 OC
  88 OF
  UV Index: 9
  Sunny
 • Day After
  Aurangabad-Bihar
  33 OC
  92 OF
  UV Index: 10
  Sunny