அகுவாடா - கோட்டைகளும், கடற்கரைகளும்!
அகுவாடா கோட்டை, 17-ஆம் நூற்றாண்டுகளில் டச் மற்றும் மராட்டியர்களின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை, கலங்கரை விளக்கத்துடன் சேர்த்து அகுவாடா கடற்கரையில், அரபிக் கடலின் பின்னணியில் பார்க்கும் எவருமே சொக்கிப் போவது நிச்சயம். அதோடு இந்தப் பகுதியில் உள்ள......
அலிபாக் - கவர்ந்திழுக்கும் சிறு நகரம்
மஹாரஷ்டிராவின்மேற்குக்கடற்கரைப்பகுதியில் கொங்கணப்பிரதேசத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த அலிபாக் நகரம் அமைந்துள்ளது. இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை குறிப்பிடும்படியாக இது அலிபாக் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான மா மற்றும் தென்னை மரங்களை இங்கு அலி நட்டதாக......
ஆலப்புழா – கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்
‘ஆலெப்பி’ என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா’ உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்’ என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது. ஆலப்புழாவின் மனம் மயக்க......
அஞ்சுனா பீச் - புத்துயிர் பெற்றிடுவோம்!
அஞ்சுனா பீச் புகழ்பெற்ற கேண்டலிம் கடற்கரையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் சாலை மார்க்கமாக எளிதாக அடைந்து விடலாம். இந்தக் கடற்கரைகளில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப புதிய புதிய உணவு வகைகளை தினந்தோறும் பரிமாறும் ஹோட்டல்கள் உங்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம். மேலும்......
அரம்போள் பீச் - தனிமை சொர்க்கம்!
அரம்போள் பீச், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு அருகில் இருந்தாலும், அந்த கடற்கரைகளை போல் வணிகமயமாக்கலின் சாயம் படிந்ததல்ல. இந்தக் கடற்கரையும், இதைச் சார்ந்து முற்றிலும் தூய நீரினால் அமையப்பெற்ற ஏரியும் எளிமையின் உருவமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற கடற்கரைகளை போல இங்கு......
அரோசிம் பீச் - கோவான் உணவை ருசிப்போம்!
தெற்கு கோவாவில் உள்ள கோல்வா சாலையில் அமைந்திருக்கும் சிறிய கடற்கரையான அரோசிம் பீச்சில் எண்ணற்ற நீர் விளையாட்டுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருக்குமாதலால் பயணிகள் கடலின் ஆழத்துக்கு செல்வது போன்ற துணிகர முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.......
பாகா பீச் - கேளிக்கையின் குடியிருப்பு!
நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற கடற்கரை கோவாவில் உண்டெனில் அது பாகா பீச்சை தவிர வேறெதுவாக இருக்க முடியும். இங்கு கடற்கரைக் குடில்கள் முதல் உணவகங்கள் வரை, சிறந்த ஹோட்டல்கள் முதல் அசல் ஜேர்மன் அடுமனை வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை கொடுக்கும். பாகா......
பக்காலி – கடலோர எழில் அழகு!
பக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர சந்தடியிலிருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க ஏங்குபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடம். கடற்கரையோடு கூடிய இரட்டை நகரம் இரட்டை நகரங்களான பக்காலி மற்றும் ஃப்ரேசர்குஞ்ச்......
பேக்கல் - சலனமற்ற நீர்ப்பிரவாகத்தின் மத்தியில் ஒரு இன்பச் சுற்றுலா!
கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பேக்கல், அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில், அரபிக் கடலின் கரையோரத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த நகரில் வலியகுளம் என்ற பெயரில் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய அரண்மனை ஒன்று இருந்தது. இதன் காரணமாகவே பெரிய அரண்மனை என்ற......
பீட்டல் பீச் - கடல் நீரில் நீந்தி திளையுங்கள்!
தெற்கு கோவா பகுதிகளிலுள்ள மற்ற கடற்கரைகளை போல பீட்டல் பீச்சும் அமைதியான கடற்கரைதான். இந்தக் கடற்கரையிலிருந்து கோல்வா பீச் நடந்து செல்லும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு இதன் சுற்றுப் பகுதிகளில் லீலா, தாஜ், ஹாலிடே இன் போன்ற 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக......
பட்கல் – வரலாற்றின் சுவடுகள் பதிந்த நிலம்
கர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும் அறியப்பட்டுள்ளது. உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் கார்வார் நகரத்திலிருந்து 130 கி.மீ தூரத்திலேயே......
போக்மாலு பீச் - சூரியனின் இளஞ்சூட்டு ஸ்பரிசம்!
போக்மாலு பீச் கோவா விமான நிலையத்துக்கும், வாஸ்கோடகாமா நகரத்துக்கும் வெகு அருகிலேயே இருப்பதால் சுலபமாக அடைந்து விடலாம். இங்கு நீங்கள் காலை நேரம் முழுக்க நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம். அதன் பின்னர் நேவல் மியூசியம் சென்று வரலாற்று காலத்தில் கொஞ்ச நேரம் பயணிக்கலாம். இல்லையென்றால் போக்மாலு......
போர்டி - கடற்கரை நகரம்
மும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது. சுத்தமான ஏகாந்தமான கடற்கரை இயற்கை எழிலுடன் இந்தப்பகுதியில் காணப்படுகிறது. இங்கு மணல் தனது உண்மையான நிறத்தையும் தன்மையையும்......
பைந்தூர் - சூரியனும், சமுத்திரமும் சங்கமிக்கும் இடம்
பைந்தூர் கிராமம் அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா நகரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பைந்தூர் அருகே உள்ள ஒட்டினன்னே என்ற சிறு குன்றில், பைந்து என்ற ரிஷி கடும் தவம்......
கலங்கூட் பீச் - வானில் பறந்து திளைப்போம்!
வடக்கு கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளான கேண்டலிம் மற்றும் பாகா கடற்கரைகளுக்கு மத்தியில் கலங்கூட் பீச் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. இந்தக் கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி மிகவும் விசாலமானது. இந்த பார்க்கிங் பகுதியை ஒட்டி......
கேண்டலிம் பீச் - கடல் அலைகளில் ரிவர் பிரின்சஸ்!
கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. ஆனால் இந்தக் கடற்கரையில் ஆங்காங்கு மணற்குன்றுகள் காணப்படுவதால் நடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும். அதோடு இங்கு ஒரு சில குடில்களையும்,......
சந்திபூர் - சமுத்திரம் மறையும் இடம்!
சந்திபூர் என்ற கடற்கரை ரிசார்ட், ஒடிசாவில் உள்ள பாலேஷ்வர் மாவட்டத்தில், பாலேஷ்வர் இரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் கடல் ஒரு தனி வகையாக விளங்குகிறது. இங்கு இயற்கையின் விசித்திரமான விளையாட்டை நாம் காணலாம். அதாவது ஒரு சமயத்தில் திடீரென உள்வாங்கும் கடல் அடுத்த......
சிப்லுன் - அழகிய கடற்கரை நகரம்
மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம். இந்த நகரம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் இருப்பதால் பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக சிப்லுன் அருகேதான் வாகனங்களை நிறுத்தி விட்டு......
சோர்வாத் - மீன் பிடிக்க, ஓய்வெடுக்க, புத்துணர்ச்சி பெற!
சோர்வாத் என்ற சிறிய மீன்பிடி கிராமம் 1930-ல் ஜுனகத்தின் நவாப், முகம்மது மகாபத் கஞ்சி III ரசூல் கஞ்சி, ஜுனகத்தின் வட்டார ஆளுநராக இருந்த போது இங்கு கட்டிய கோடை காலத்து அரண்மனையால் புகழ் பெறத் தொடங்கியது. இந்த அரண்மனை இந்தியா சுதந்திரம் பெரும் வரை இவர் ஆட்சியில் தான் இருந்தது. தரியா மஹால் என்று......
கோல்வா பீச் - இயற்கை சித்திரம்!
தெற்கு கோவாவில் அமைந்திருக்கும் கோல்வா பீச், வடக்கு கோவாவில் உள்ள மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் மிகவும் அமைதியானது. அதுமட்டுமல்லாமல் 24 கிலோமீட்டர் நீளம் பறந்து விரிந்து கிடக்கும் இந்தக் கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று. மேலும் ஒருபுறம் தெற்கு கோவா கேளிக்கைகளில் இருந்து ஒதுங்கி......
கோல்வேல் - ஏகாந்த கடற்கரைகளின் பூமி!
வடக்கு கோவாவில் உள்ள கோல்வேல் நகரில், நீங்கள் கோவாவின் மற்ற சுற்றுலாத் தலங்களில் காண்பது போல கடலையும், மணற்பரப்பையும் காண முடியாது. இந்த நகரம் வளம் கொழிக்கும் நெற்பயிர்களின் மத்தியிலே, கேண்டலிம், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வடகிழக்கே அமைந்திருக்கும் முக்கியமான கேளிக்கை பகுதியாகும்.......
கோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு
தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர். கோவளத்தில் உள்ள டச்சு......
கடலூர் - கோயில்களை தரிசிப்போம்! கடலில் விளையாடி திளைப்போம்!
கடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு அழகிய கடற்கரைகள் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆலயங்களுக்காகவும் பெயர்பெற்ற இடம் கடலூர் நகரம் . இது பழைய கடலூர் (ஓல்டு......
கட்டாக் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரம்!
ஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின் கலாச்சார மற்றும் வியாபார தலைநகராக கருதப்படுகிறது. மகாநதி மற்றும் கத்ஜோரி நதிகளின் கரைகளில் அமைந்துள்ளபடியால் அழகுமிக்கதாக......
தமன் - எழிற்கடற்கரைகளில் ஓர் கனவுப்பயணம்
தமன் என்றழைக்கப்படும் இந்த நகரம் 450 வருடங்களுக்கும் மேலாக கோவா மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய பிரதேசங்களுடன் சேர்ந்து ஒரு போர்த்துகீசிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது. 1961ம் ஆண்டு டிசம்பர் 19ம் நாள் இந்த தமன் நகரம் அரபிக்கடலை ஒட்டிய இதர போர்த்துகீசிய பிரதேசங்களுடன் சேர்த்து......
டிகா - கடற்கரை நகரம்!
பல வருடங்களாக வார இறுதியைக் கழிக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது கோல்கட்டாவிற்கு அருகில் உள்ள டிகா நகரம். கோல்கட்டா மற்றும் கரக்பூருக்கு அருகில் உள்ள இந்நகரம் ரயில் மற்றும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரெட்டை கடற்கரை இயற்கையான கடற்கரையில் இருந்து 2கிமீ தொலைவில் டிகா சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ள......
தியூ – எங்கும் கடல் மணற்பரப்பு!
தியூ எனும் எனும் இந்த சிறு தீவு குஜராத் மாநில சௌராஷ்டிரா (கத்தியவாட்) தீபகற்ப பகுதியின் தென்முனையில் வீற்றிருக்கிறது. ரம்மியமான தென்னை மரங்கள் பின்னணியில் அணிவகுத்திருக்க, அரபிக்கடலின் அழகிய மணற்கடற்கரைகளை கொண்ட இந்த தீவு ஒரு சொர்க்கபுரி போன்று இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. புராதன காலத்திலும்......
டோனா பௌலா - இந்திய மீனவனை காதலித்த வெள்ளைக்கார பெண்!
கோவா தலைநகர் பனாஜியின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் டோனா பௌலா, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை ஒருசேர கவர்ந்திழுக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். டோனா பௌலா வடக்கு மற்றும் தெற்கு கோவாவுக்கும், விமான நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதால் கோவாவின் மற்ற இடங்களுக்கு......
துவாரகா - குஜராத் மாநிலத்தின் ஆன்மீக கேந்திரம்!
துவாரவதி என்ற சம்ஸ்கிருத பெயராலும் அறியப்படும் துவாரகா நகரம் இந்தியாவிலுள்ள ஏழு புனிதமான நகரங்களில் ஒன்றாகும். ஷீ கிருஷ்ணர் வாழ்ந்த இடமாக இது இந்து இதிகாசங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சார் தாம் எனப்படும் நான்கு முக்கிய புண்ணிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவும், சப்தபுரி எனப்படும் ஏழு புனித......
கஞ்சம் - கடற்கரைகள் மற்றும் திருவிழாக்களின் உறைவிடம்!
ஒடிசா மாநிலத்தின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று கஞ்சம். 'கன்-இ.ஆம்' என்ற வார்த்தைக்கு தானியங்களை சேகரித்து வைக்கும் இடம் என்று பொருளாகும். வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் வருடம் முழுவதும் சுற்றுலா வர ஏற்ற எண்ணற்ற கடற்கரைகளை கொண்டுள்ள இடமாக கஞ்சம் உள்ளது. பசுமைப் போர்வையில், சிறு சிறு......