பட்கல் – வரலாற்றின் சுவடுகள் பதிந்த நிலம்

கர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும் அறியப்பட்டுள்ளது. உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் கார்வார் நகரத்திலிருந்து 130 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 17ல் அமைந்துள்ள இந்த நகரம் கொங்கண் ரயில் பாதை வழியாகவும் சென்றடையும்படி உள்ளது.

வரலாற்றுத்தகவல்கள்

பட்கல் நகரம் மிக சுவாசியமான வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. இது ஹொய்சள ராஜ வம்சத்தினருக்கு சொந்தமாக இருந்தபோதிலும் தொடர்ந்து பல முறை மற்ற அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளது.

விஜய நகர சாம்ராஜ்ய மன்னர்கள், சாளுவ அரசர்கள் மற்றும் சோழ மன்னர்கள் இந்த பட்கல் பிரதேசத்தில் தடம் பதித்து சென்றுள்ளனர். இந்த நகரம் போர்த்துகீசிய ஆதிக்கத்துக்கும் உட்பட்டுள்ளது. இறுதியாக திப்பு சுல்தானால் இந்த பட்கல் நகரம் அவர் ஆங்கிலேயரால் வெல்லப்படும் வரை ஆளப்பட்டுள்ளது.

இப்படி கலவையான பின்னணியை கொண்டுள்ளதால் பட்கல் நகரம் ஒரு தனித்தன்மையான அடையாளத்துடன் திகழ்கிறது. கோயில்கள், மசூதிகள், ஜெயின் பசாதிகள் போன்றவை இந்த நகரத்தில் ஒருசேர அமைந்துள்ளன. இங்குள்ள பிரசித்தமான மசூதிகளாக ஜமியா மஸ்ஜித், கலிஃபா மஸ்ஜித் மற்றும் நூர் மஸ்ஜித் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மிக முக்கியமான கோயிலாக கேதப்பைய நாராயண கோயிலை குறிப்பிடலாம். மேலும் பயணிகள் இங்குள்ள பளிரென்ற வெண் மணலுடன் காட்சியளிக்கும் தூய்மை கடற்கரைகளையும் சூரியனின் அற்புத அழகையும் இங்கு கண்டு ரசிக்கலாம்.

பட்கல் நகரத்துக்கு ரயில் அல்லது சாலை மார்க்கமாக சுலபமாக பயணிக்கலாம். இது தவிர மங்களூர் விமான நிலையம் பட்கலுக்கு அருகில் உள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை உள்ள காலம் முக்கிய சுற்றுலாப்பருவமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் இப்பிரதேசத்தின் சீதோஷ்ணநிலை மிக இனிமையாக காணப்படுகிறது.

Please Wait while comments are loading...