Search
  • Follow NativePlanet
Share

உடுப்பி - சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்குமான நகரம்.

72

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் இதன் உணவுச்சுவைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் ஊறும் அளவுக்கு மத்வா இனத்தவரின் தென்னிந்திய பாணி உணவுத்தயாரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவர்கள் காலங்காலமாக தெய்வப்பிரசாதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இன்றும் அந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர்கள்.

உடுப்பி நகரம் பெங்களூரிலிருந்து 400 கி.மீ தூரத்திலும் மங்களூரிலிருந்து 54 கி.மீ தூரத்திலும் உள்ளது.

இந்த ஸ்தலம் முக்கியமாக இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. 1000 ஆண்டுகள் பழமையை கொண்டதாக கருதப்படும் சிவன் கோயில் ஒன்றும் உடுப்பிக்கு அருகிலுள்ள எல்லூர் எனும் இடத்தில் உள்ளது. இந்து மத குரு மத்வாச்சாரியார் அவர்களால் நிறுவப்பட்ட உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் இங்குள்ளது.

கடவுளுக்கான நைவேத்தியங்களை சுத்தமுடனும் சுவையுடனும் எளிமையான தயாரிப்பு முறையுடனும் சமைப்பதில் பாரம்பரிய அனுபவமுள்ள உடுப்பி பிராம்மணர்களின் கீர்த்தி கர்நாடக மாநிலத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் பரவியிருப்பது குறிப்பிட த்தக்கது. அதிலும் உடுப்பி தோசை மற்றும் அதன் துணை உணவுகள் மிகவும்  பிரசித்தமானவை.

உள்ளூர் ஐதீகங்கள் பற்றிய அறிமுகம்

புராண ஐதீகக்கதைகளின் படி இந்திய ஜோதிட சாஸ்திரத்தின் 27 நட்சத்திரங்களும் சந்திரனை திருமணம் செய்துகொண்டதாகவும் அதற்குப்பின் சந்திரன் தன் ஒளியை இழந்தது என்றும் சொல்லப்படுகிறது.

எல்லா குறைகளையும் தீர்க்கும் ஒரே கடவுள் சிவன் என்பதால், சந்திரனும் நட்சத்திரங்களும் சேர்ந்து ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து சிவனை நினைத்து பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த லிங்கத்தை இன்றும் உடுப்பியில் காணலாம். ‘உடு’ எனும் சொல் ஈஸ்வரனையும் ‘ப’ என்பது சந்திரனையும் குறிப்பதாகும்.

உடுப்பியிலுள்ள கிருஷ்ணர் கோயிலைப்பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, 16ம் நூற்றாண்டில் கனகதாஸர் எனும் தாழ்ந்த குலத்தை சேர்ந்த பக்தர் கிருஷ்ண பகவானை தரிசிக்க விரும்பியதாகவும், கோயிலுக்குள் செல்ல அவருக்கு அனுமதி இல்லாததால் அவர் ஜன்னல் வழியாக கிருஷ்ணபஹவானை தரிசிக்க முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. தன்னை தரிசிப்பதற்காக பக்தன் படும் அவஸ்தையை கண்ட கிருஷ்ண பஹவான் தானே அவன் இருக்கும் திசையை நோக்கி  திரும்பி அவனுக்கு தரிசனம் தந்ததாகவும் அந்த ஐதீகக்கதை முடிகிறது.

உடுப்பியில் பார்ப்பதற்கு என்னென்ன உள்ளன

கிருஷ்ணர் கோயிலை தவிர்த்து இங்கு மல்பே என்னும் இடத்தில் அமைந்த அழகிய கடற்கரைகளும், எல்லூர் ஷீ விஷ்வேஷ்ரர் கோயிலும் உள்ளன. உடுப்பி நகரம் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. உடுப்பிக்கு அருகில் மங்களூர் விமான நிலையம் உள்ளது.

இங்குள்ள கிருஷ்ண மடத்துடன் இணைந்த ஒரு குருகுலப்பள்ளி ஒன்றும் இங்குள்ளது. இங்கு வைணவ மரப்புக்கான த்வைத தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன. எல்லா தரப்பினரின் நிதிநிலைக்கும் ஏற்றபடி பலவகையான தங்கும் விடுதிகள் இங்கு அமைந்துள்ளன.

பலவிதமான கைவினைபொருட்கள் மற்றும் விளையாட்டுப்பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. எல்லா கிருஷ்ணர் கோயில்களையும் போல இங்கும் முரசு பொம்மைகள் விற்கப்படுகின்றன.

உடுப்பி சிறப்பு

உடுப்பி வானிலை

சிறந்த காலநிலை உடுப்பி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது உடுப்பி

  • சாலை வழியாக
    உடுப்பி நகரம் NH 17 மற்றும் NH 66 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளின் வழியில் அமைந்துள்ளதால் மிகச்சுலபமாக எந்த நகரத்திலிருந்தும் சாலை மார்க்கமாக உடுப்பிக்கு பயணிக்கலாம். அவை தவிர மாநில நெடுஞ்சாலைகள் உடுப்பியை கர்கலா, தர்மஸ்தலா, ஷிமோகா மற்றும் ஷீநாரி போன்ற கர்நாடக மாநில நகரங்களுடன் சிறப்பான முறையில் இணைக்கின்றன. சாலை வசதிகள் சிறப்பாக இருப்பதால் எப்பகுதியிலிருந்தும் உடுப்பி செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏராளம் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொங்கண் ரயில்வே பாதையில் உடுப்பி அமைந்துள்ளதால் மும்பை, டெல்லி, ராஜ்கோட், அஹ்மதாபாத் போன்ற பெருநகரங்களுக்கு இங்கிருந்து நேரடியாக ரயில் வசதிகள் உள்ளன. உடுப்பியிலிருந்து வடக்கில் பிரயாணம் செய்ய விரும்பினால் குண்டபுரா ரயில் நிலையம் அருகில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மங்களூர் விமான நிலையம் உடுப்பிக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையமாகும். இது உடுப்பியிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu