Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உடுப்பி » ஈர்க்கும் இடங்கள் » கிருஷ்ணர் கோயில்

கிருஷ்ணர் கோயில், உடுப்பி

10

உடுப்பியின் கிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற புண்ணிய யாத்ரீக ஸ்தலமாகும். கிருஷ்ண பகவானை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

 

இந்தக் கோயிலில் உள்ள விசேஷம் இங்கு கிருஷ்ணர் ஒரு ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னல் வழியாக தரிசனம் அளிக்கும் அம்சமாகும். இப்படி கிடைக்கும் தரிசனம் பக்தர்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.

இங்குள்ள கிருஷ்ண விக்கிரகத்தின் மீது செய்யப்பட்டுள்ள அலங்காரம் மனம் மயக்கும் விதத்தில் காணப்படுகிறது. சில சமயம் தங்க ஆபரணங்களாலும் சில சமயம் வைர ஆபரணங்களாலும் இந்த விக்கிரகம் அலங்கரிக்கப்படுகிறது.

கருட பஹவானுக்கும், ஹனுமானுக்கும் இங்கு தனியே பீடங்கள் உள்ளன. 1500 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை கொண்டுள்ள இந்தக் கோயில் இந்தப்பகுதியிலேயே பழமையான கோயில் எனும் பெருமையை பெற்றுள்ளது. ராம நவமி மற்றும் உகாதி போன்றவை இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களாகும்.

பிரதான பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ கிழக்காகவும், ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ மேற்காகவும் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு ஆட்டோவில் செல்ல பஸ் நிலையத்திலிருந்து பத்து ரூபாயும், ரயில் நிலையத்திலிருந்து இருபத்தி ஐந்து ரூபாயும்  வசூலிக்கப்படுகிறது. காலை 5 மணியிலிருந்து இரவு 9.30 வரை கோயில் திறந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon