கும்டா - செழிப்பான சிறு கடற்கரை நகரம்

கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த கும்டா நகரம் பிரமிப்பூட்டும் இயற்கை காட்சிகளையும் தொன்மையான நினைவுச்சின்னங்களையும் கொண்டு ஒரு மறக்க முடியாத சுற்றுலா ஸ்தலத்துக்கான அம்சங்களுடன் விளங்குகிறது.

 

கர்நாடகக் கடற்கரை எழில்

அற்புதமான பாறை வடிவங்கள் பின்னணியில் காட்சியளிக்கும் எழில் நிறைந்த கடற்கரையில் இந்த கும்டா சிறுநகரம் அமைந்துள்ளது. பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் இந்த நகரில் ஏராளம் உள்ளன. அகனாஷனி ஆறு அழகான நெளிவுகளுடன் ஓடி அரபிக்கடலில் கலப்பதை இங்கு காணலாம்.

சாகச அனுபவங்களை விரும்பும் சுற்றுலா பயணிகள் இங்கு பாறைஏற்றத்தில் ஈடுபடுவதற்கான வசதிகள் இங்குள்ளன. அதற்கான பொருத்தமான இடமாக இங்குள்ள யனா என்னுமிடத்தில் பிரம்மாண்ட பாறை வடிவமைப்புகள் காணப்படுகின்றன.

நடைப்பயணம் மேற்கொள்வதற்கேற்ப ஒற்றையடிப்பாதைகளும் இங்குள்ளன. ஓம் பீச் மற்றும் கோகர்ணா கோயில் போன்ற பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ள கோகர்ணா நகரம் கும்டாவிற்கு அருகிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக நாட்டத்தைக் கொண்டுள்ள யாத்ரீக பயணிகளுக்கு கும்டா நகரத்திலுள்ள கோயில்கள் பரவச அனுபவத்தை அளிக்கின்றன. புராதனக் கோயில்களான ஷீ கும்பேஷ்வர், ஷங்கர நாரயணா, ஷாந்திக பரமேஷ்வரி  போன்றவை பழங்கால காவி கலை வடிவத்திற்கு எடுத்துக்காட்டுகளாய் உள்ளன.

இந்த கும்டா ஸ்தலத்துக்கு வருகை தருவதில் மற்றொரு முக்கியமான பலனும் உள்ளது. கார்வார் மற்றும் ஹனோவர் போன்ற முக்கியமான சுற்றுலாஸ்தலங்களுக்கும் சேர்த்தே நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்பதே அது.

கார்வாரில் அழகிய கடற்கரைகளும் கோயில்களும் நிறைந்துள்ளன. அங்குள்ள தேவ்பாக் தீவு இயற்கை வனப்பு நிரம்பியதாக மட்டுமல்லாமல் ‘ஸ்கூபா டைவிங்’ நீர்மூழ்கு விளையாட்டுக்கு பிரசித்தமாக உள்ளது. ஹனோவரில் ஷரவதி டெல்டா, காசர்கோட் பீச் மற்றும் அப்சரகொண்டா நீர்வீழ்ச்சி போன்றவை விசேஷ சுற்றுலா அம்சங்களாக உள்ளன.

மங்களூரிலிருந்து 200 கி.மீ தூரத்தில் கும்டா அமைந்துள்ளது. இங்கிருந்து 5 கி.மீ தொலைவில் ரயில் நிலையமும் உள்ளது.

Please Wait while comments are loading...