சோன்டா - மடாலய நகரம்

கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில் நகரமான சிர்சி ஸ்தலத்துக்கு அருகில் உள்ள இந்த சோன்டா நகரம் பிரசித்தமான கோயில் நகரமாகவும், வாடிராஜ மடம் அமைந்துள்ள ஸ்தலமாகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சோன்டா நகரம் 16ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை ஸ்வாதி ராஜவம்சத்தின் முக்கிய நகரமாக விளங்கியுள்ளது. ஷீ மத்துவாச்சாரியாரின் துவைத தத்துவ மரபை பரப்புவதற்காகவே இங்கு ஸ்ரீ  வாடிராஜா மன்னரால் ஒரு பெரிய மடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சோன்டா ஸ்தலத்தில்  பயணிகளைக் கவரும் அம்சங்கள்

இங்குள்ள கோயில் விஷ்ணுவின் அவதாரமான திரிவிக்கிரம பஹவானுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறையில் திரிவிக்கிரம கடவுளின் அற்புதமான சிற்பம் காணப்படுகிறது.

கோயிலுக்கு வெளியில் திருவிழாக்களின் போது பயன்படுத்தும் ரதம் காணப்படுகிறது. ரதத்தின் உள்ளே துணைவியாரான மஹாலட்சுமியின் சிற்பம் அமைந்துள்ளது. கோயிலின் வடபகுதியில் ராஜங்கனா மற்றும் மடத்தின் வாயில் தென்படுகிறது. 24 படிகளில் இறங்கி இங்கு வரவேண்டியுள்ளது. இந்த இடத்தில் ஒரு திரு மடப்பள்ளி, பூஜா மண்டபம் போன்றவை உள்ளன.

சோன்டா கிராமம் ஒரு பழைய கோட்டையையும் பெற்றுள்ளது. இங்கு பல புராதன சிறிய ரக பீரங்கிகள் காணப்படுகின்றன.

சோண்டா ஸ்தலத்தில் வாடிராஜ மடத்தைத்தவிர இதர இரண்டு பெரிய மடங்களான அகலங்க மடம் மற்றும் ஸ்வர்ணவல்லி மடம் போன்றவையும் அமைந்துள்ளன. மற்றும் ஒரு ஜெயின் பசாதியும் ஒரு வெங்கட்ரமணா கோயிலும் இங்கு உள்ளன.

சோன்டா அல்லது சோடே என்று அறியப்படும் இந்த ஆன்மீகஸ்தலம் இங்குள்ள கோயில்களுக்கும் ஹிந்து ஆன்மீக மடங்களுக்கும் பிரசித்தமாய் அறியப்படுகிறது.

Please Wait while comments are loading...