Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோன்டா » வானிலை

சோன்டா வானிலை

சோன்டாவுக்கு விஜயம் செய்ய குளிர்காலமே ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இனிமையான் சூழலும் சீதோஷ்ண நிலையும் காணப்படுகிறது.

கோடைகாலம்

(மார்ச் – மே): கோடைக்காலத்தில் சோன்டா கிராமம் மிகுந்த உஷ்ணத்துடனும் அசௌகரியமாகவும் காணப்படுவதால் பயணிகள் கோடைக்காலத்தில் சோன்டாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். அதிகபட்ச வெப்பநிலையாக பகலில் 38° C ஆகவும் அதே சமயம் இரவு வெப்பநிலை 30° C என்ற அளவில் குறைந்தும் காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூன் – செப்டம்பர்): கடற்கரை அருகில் அமைந்துள்ளதால் சோன்டா ஸ்தலம் மழைக்காலத்தில் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.  இங்கு சுற்றுலா செல்வதற்கு மழைக்காலம் உகந்ததாக இருப்பதில்லை.

குளிர்காலம்

(நவம்பர் – பிப்ரவரி): குளிர் காலத்தில் சோன்டா நகரின் பருவ நிலை மிக விரும்பத் தக்கதாக இனிமையாக காணப்படுகிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 25° C என்ற அளவில் காணப்படுகிறது. குளிர்காலத்தில் சீதோஷ்ணநிலை இதமாக இருப்பதால் இம்மாதத்தில் சோன்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது சிறந்தது.