ஹொன்னேமரடு – சாகச நெஞ்சங்களுக்கான சுற்றுலாத்தலம்

ஹொன்னேமரடு என்ற  இந்த விடுமுறை சுற்றுலாஸ்தலம் சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நீர் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்காகவே காத்திருக்கும் ஒரு ஸ்தலமாகும். இந்த சிறிய கிராமம் ஹொன்னேமரடு நீர்த்தேக்கத்தின் அருகில் ஒரு மலைச்சரிவில் அமைந்துள்ளது. ஷிமோகா மாவட்டத்தில் பெங்களூரிலிருந்து 379 கி.மீ தூரத்தில் இந்த அழகு கிராமம் உள்ளது.

 

சில உள்ளூர் தகவல்கள்

ஹொன்னேமரடு எனும் இந்த பெயர் ஹொன்னே மரம் எனும் சொல்லிலிருந்து பிறந்துள்ளது. எனினும் ஹொன்னேமரடு எனும் சொல்லுக்கு சரியான பொருள் தங்க ஏரி என்பதாகும். ஷரவதி ஆற்றின் நீர்த்தேக்கப்பகுதிக்குள் அமைந்திருப்பதால் இந்த பெயரைப்பெற்றிருப்பதாகவும் சொல்லலாம்.

ஹொன்னேமரடு ஸ்தலத்தின் விசேஷ அம்சம் இங்குள்ள நீர்த்தேக்கத்தின் மையத்தின் அமைந்துள்ள ஒரு சிறு தீவுப்பகுதியாகும். இந்த தீவில் இரவுத்தங்கலுக்கான கூடார குடில்கள் அமைந்துள்ளன.

நன்னீர் நீச்சல் குளம் மற்றும் அடர்த்தியான வனப்பகுதி போன்றவை இங்கு வருகை தரும் பயணிகளுக்கு மிதவைப்படகு சவாரி, நீச்சல் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்கின்றன. இக்காட்டின் வழியாக இயற்கை நடைப்பயணம் மேற்கொள்ளும்போது பலவிதமான பறவை வகைகளையும் பார்த்து ரசிக்கலாம்.

புகழ் பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சியை பார்க்காமல் இந்த ஹொன்னேமரடு சுற்றுலாப்பயணம் பூர்த்தியடையாது என்றே சொல்லலாம். ஷரவதி ஆற்றில் அசரவைக்கும் 829 அடி உயரத்திலிருந்து வீழும் இந்த நீர்வீழ்ச்சி ஹொன்னேமரடு அமைந்திருக்கும் மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. ஜோக் நீர்வீழ்ச்சியிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள மற்றொரு நீர்வீழ்ச்சியான தப்பே நீர்வீழ்ச்சிக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

ஹொன்னேமரடு அருகில் உள்ள ரயில் நிலையம் ஷிமோகா ஆகும். பெங்களூரிலிருந்தே பயணிகள் காரிலும் ஹொன்னேமரடுக்கு செல்லலாம். உள்ளூர் போக்குவரத்துக்கு பேருந்துகள் மற்றும் பரிசல் போக்குவரத்து போன்றவை உள்ளன.

Please Wait while comments are loading...