பனவாசி - வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆன்மீக ஸ்தலம்

சரித்திர புகழ் வாய்ந்த பனவாசி நகரம் உத்தர கன்னடா மாவட்டத்தில், வரதா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆன்மீக ஸ்தலமாகும்.

மகாபாரத காலத்திலிருந்தே பனவாசி புகழ் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. வியாசர் எழுதிய மகாபாரதத்தில் பனவாசி நகரம், வனவாசகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பின்னர் 1552-ஆம் ஆண்டின் விஜயநகர கல்வெட்டுகளில் கனகவதி என்றும், இரண்டாம் புலிகேசி காலத்திய கல்வெட்டுகளில் ஜலதுர்கா என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை தவிர கொங்கனபுரா என்றும் பனவாசி அழைக்கப்படுகிறது.

பனவாசியின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்குவது மதுகேஸ்வரா ஆலயமே ஆகும். இந்த கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னர்களால் கட்டப்பட்டது.

இதன் கட்டிடக் கலை சிறப்புக்காகவும், கோயிலை சுற்றி உள்ள சிற்ப வேலைப்பாடுகளின் தனித்துவமான அழகுக்காகவும் இது உலகப் புகழ் பெற்றது.

மதுகேஸ்வரா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கடம்போஸ்தவா என்ற கலாச்சார திருவிழா நடைபெறும். இதில் யக்ஷ்கானா உள்ளிட்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் , கர்நாடக மாநில அரசால் வெகு விமரிசையாக நடத்தப்படும்.

Please Wait while comments are loading...