ஹொரநாடு - இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட நகரம்

ஹொரநாடு நகரம் புகழ் பெற்ற அன்னபூர்ணேஸ்வரி கோயில் அமைத்திருக்கும்  புண்ணிய ஸ்தலமாகும். இது சிக்மகளூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், மல்நாடு மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. வளமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும் சூழ அமைந்திருக்கும் ஹொரநாடு நகரம் இயற்கை அள்ளித் தந்த கொடை.

ஹொரநாட்டின் இயற்கை அழகை தவிர இந்த நகரத்துக்கு பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதற்கு அன்னபூர்ணேஸ்வரி கோயில் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயில் விக்ரகம் தங்கத்தால் செய்யப்பட்டது.

அதோடு இங்கு வந்து இந்த தெய்வத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்கையில் உணவுக் கஷ்டமே வராது என்பது ஐதீகம்.

ஒருமுறை சிவபெருமான் சாபத்தால் தவித்த போது இந்த அன்னபூர்ணேஸ்வரி அம்மன் தான் சாபவிமோச்சனம் அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பயணிகளுக்கும் உண்ண உணவும், உறைவிடமும் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஹொரநாடு வருபவர்கள் அதன் அருகில் உள்ள உடுப்பி கிருஷ்ண கோயில், சிருங்கேரி மற்றும் தர்மஸ்தாலா போன்ற இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம்.

Please Wait while comments are loading...