அன்னபூர்ணேஸ்வரி கோயில், ஹொரநாடு

அன்னபூர்ணேஸ்வரி கோயில் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், பத்ரா நதியின் கரையோரமாக அமைந்திருக்கிறது. இது ஸ்ரீ ஷேத்ர ஹொரநாடு என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அன்னபூர்ணேஸ்வரி விக்ரகத்தை அகஸ்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாக புராணம் கூறுகிறது .இந்த விக்ரகம் தங்கத்தால் செய்யப்பட்டது ஆகும். ஒரு முறை சிவபெருமானுக்கு ஏற்பட்ட சாபத்துக்கு இந்த  அன்னபூர்ணேஸ்வரி அம்மன்தான்  விமோச்சனம் அளித்ததாக நம்பப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து காணப்பட்ட இந்தக் கோயில் பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் இந்த அம்மனுக்கு  'ஆதி சக்த்ய மகா ஸ்ரீ  அன்னபூர்ணேஸ்வரி' என்ற சிறப்பு பெயரும் வந்தது.

அன்னபூர்ணேஸ்வரி அம்மன் தன் நான்கு கைகளிலும் ஸ்ரீ சக்கரத்தையும், சக்கரத்தையும், சங்கையும் , தேவி காயத்ரியையும் பிடித்த வண்ணம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அன்னபூரணி என்னும் பெயருக்கு ஏற்றார் போல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மூன்று வேலை உணவும், உறைவிடவும்  தந்து அக்ஷயப் பாத்திரமாகவே திகழ்கிறது இந்தக் கோயில். இந்த அம்மனை தரிசிப்பவர்களுக்கு வாழ்கையில் உணவுப் பஞ்சமே வராது என்று சொல்லப்படுகிறது.

Please Wait while comments are loading...