குக்கே சுப்ரமண்யா - முருகக்கடவுள் பாம்புக்கடவுளாக தரிசனமளிக்கும் ஸ்தலம்

கர்நாடக மாநிலத்தில் மங்களூருக்கு அருகே சுல்லியா எனுமிடத்தில் இந்த குக்கே சுப்ரமண்யா கோயில் அமைந்துள்ளது. முருகக்கடவுள் அல்லது சுப்ரமண்யா இங்கே பாம்புகளின் கடவுளாக இந்த கோயிலில் காட்சியளிக்கின்றார். புகழ்பெற்ற பக்திஸ்தலமாக திகழும் இந்தக் கோயிலுக்குப்பின் பல ஐதீகக்கதைகள் சொல்லப்படுவதால் இங்கு ஆன்மிக யாத்ரீகர்களும், சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

 

புராணக்கதைகளின் விபரம்

ஐதீகமாய் கூறப்பட்டுவரும் கதைகளின்படி பாம்பு அரசனான வாசுகியானது சிவபெருமானிடம் தன் இனத்தாரை கருடனின் வேட்டையிலிருந்து காப்பாற்றுமாறு இறைஞ்சியதாகவும், வாசுகியின் தவத்திற்கிரங்கி சிவபெருமான் பாம்பு இனத்தை காப்பாற்றுவதற்காக சுப்ரமண்யக்கடவுளை அனுப்பியதாகவும் நம்பப்படுகிறது. அப்படி பாம்புகளின் ரட்சகராக சுப்ரமண்யக்கடவுள் இந்த கோயிலில் உறைவதாக ஐதீகம்.

இந்த கோயிலிலுள்ள கருட கோபுரம் விசேஷமான அம்சமாகும். வெள்ளியாலான இந்த கோபுரம் வாசுகிப்பாம்பின் விஷப்பெருமூச்சிலிருந்து பக்தர்களை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.

வாசுகிப்பாம்பு இந்த கோயிலினுள் வசிப்பதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது. அஷ்லேஷ பலி மற்றும் சர்ப்ப சம்ஸ்காரா எனும் இரண்டு முக்கியமான பூஜைகள் இந்தக் கோயிலில் நடத்தப்படுகின்றன.

குக்கே சுப்ரமணிய கோயிலுக்கு விமானம், ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து மூலமாக விஜயம் செய்ய எளிதாக உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் மங்களூர் விமான நிலையம் ஆகும். கோயிலிலிருந்து 7 கி.மீ தூரத்தில் ரயில் நிலையம் உள்ளது. பெங்களூர் மற்றும் மங்களூரிலிருந்து இந்த கோயிலுக்கு சென்று வர ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

Please Wait while comments are loading...