Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» முருதேஸ்வர்

முருதேஸ்வர் - அஸ்த்தமனத்திலும் பிரகாசிக்கும் சிவபெருமான்

25

உலகத்திலேயே  இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.

சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க,  தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.

முருதேஸ்வரின் புகழுக்கு காரணமாக விளங்கி வரும் முருதேஸ்வர் ஆலயமும், சிவன் சிலையும் மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ அமைந்திருக்கிறது.

இதன் காரணமாகவே ஆரம்பத்தில் நான்கு கைகளுடன் காணப்பட்ட சிவன் சிலையின்  உடுக்கை பிடித்திருந்த கை கடல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதேபோல் கடும் மழையின் காரணமாக அதன் தங்க முலாமும்  அழிந்து போயிற்று.

இந்தக் கோயில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயிலின் ராஜகோபுரம் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்று.

பிற கவர்ச்சி அம்சங்கள்

அரபிக்கடல் அமைதியாகவும், அழகாகவும், காணப்படுவதால் நீங்கள் கடலில் நீந்துவது, படகு சவாரி செய்வது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். கோயிலை சுற்றி உள்ள இடங்களில் மக்கள் சிறு உலா போகலாம், அதோடு அரபிக் கடலில் ஆதவன் மறைந்துபோகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து மகிழலாம்.

அப்பகுதியின் மற்றொரு பிரபலமான இடம் அலைக் குளம். இங்கு குடும்பத்தோடு வருபவர்கள் தங்கள் குழந்தைகளோடு குதூகலமாக பொழுதை களிக்கலாம். உங்களை சுற்றி நாற்புறமும் தண்ணீர் சூழ்ந்திருக்க  பெரிய பெரிய உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் அனுபவம் அலாதியானது. உங்கள் வசதிக்கு ஏற்ற உணவகங்களும், தங்கும் விடுதிகளும் இங்கே நிறைய இருக்கின்றன.

பத்க்கல் நகரம் மற்றும் சஹயாத்ரி குன்றில் காணப்படும் உல்லாச விடுதிகள், திப்பு சுல்தானின் கோட்டை போன்றவை  முருதேஸ்வருக்கு வெகு அருகில் காணப்படும் பிரபலமான சுற்றுலா பகுதிகள். 

பத்க்கல் நகருக்கு அருகில் ஜன சஞ்சாரமற்ற புறாத் தீவு என்றழைக்கப்படும் நேத்ராணி தீவு உள்ளது. பத்க்கல்லிலிருந்து படகுகளோ, மீன்பிடி படகுகளோ அமர்த்திக்கொண்டு பயணிகள் புறாத் தீவுக்கு செல்லலாம். ஆடு, மாடுகளை தவிர வேறு ஜீவன்களையே காண முடியாத புறாத்தீவு பயணிகளின் அலுத்து போன நகர வாழ்க்கைக்கு அருமருந்தாக இருக்கும்.

முருதேஸ்வர் சிறப்பு

முருதேஸ்வர் வானிலை

முருதேஸ்வர்
35oC / 95oF
 • Partly cloudy
 • Wind: NNW 23 km/h

சிறந்த காலநிலை முருதேஸ்வர்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது முருதேஸ்வர்

 • சாலை வழியாக
  பெங்களூரிலிருந்து ஹோனாவருக்கு, அரசுப் பேருந்திலிருந்து தனியார் சொகுசுப் பேருந்து வரை அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதால் பயணிகள் ஹோனாவர் வந்து பின்பு அங்கிருந்து வாடகை கார்களை அமர்த்திக் கொண்டு முருதேஸ்வருக்கு வந்து சேரலாம்.முருதேஸ்வரிலிருந்து ஹோனாவர் நகரம் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  முருதேஸ்வரிலேயே ரயில் நிலையம் இருந்தாலும் மும்பை, மங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் ஒரு சில ரயில்களே முருதேஸ்வர் ரயில் நிலையத்தில் நிற்கும். எனவே பயணிகள் முருதேஸ்வரிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மங்களூர் ரயில் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  முருதேஸ்வரிலிருந்து மங்களூர் விமான நிலையம் 153 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் குறித்த நேரத்தில் சுலபமாக முருதேஸ்வர் வந்து சேரலாம்.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Aug,Fri
Return On
08 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
07 Aug,Fri
Check Out
08 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
07 Aug,Fri
Return On
08 Aug,Sat
 • Today
  Murudeshwar
  35 OC
  95 OF
  UV Index: 9
  Partly cloudy
 • Tomorrow
  Murudeshwar
  34 OC
  93 OF
  UV Index: 9
  Sunny
 • Day After
  Murudeshwar
  33 OC
  91 OF
  UV Index: 9
  Partly cloudy