Search
  • Follow NativePlanet
Share

மங்களூர் – கர்நாடகத்தின் நுழைவாயில்

69

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று  அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது. மங்களாதேவி தெய்வத்தின் பெயரில் அமைந்திருக்கும் இந்த மங்களூர் நகரம் பல காலமாக ஓய்வில்லாத ஒரு துறைமுக நகரமாகவே விளங்கி வந்திருக்கிறது. இந்த துறைமுக நகரத்தினை பற்றிய வரலாற்று குறிப்புகள் 14 ம் நூற்றாண்டிலிருந்து நமக்குக் காண கிடைக்கின்றன. மங்களூர் அரசர்கள் மற்ற பாரசீக வளைகுடா நாடுகளோடு வணிக தொடர்பு துவங்கியதிலிருந்து இந்த குறிப்புகள் பதியப்பட்டுள்ளன.

புவியியல் ரீதியாக முக்கிய இடத்தில் இருப்பதால் மங்களூர் நகரம் பல ஆட்சியாளர்களிடம் மாறி மாறி இருந்து வந்துள்ளது. இந்த நகரத்தை கைப்பற்ற போர்த்துக்கீசியர்களும், ஆங்கியலேயரும் மைசூர் மன்னர்களான திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியுடன் பல கடுமையான போர்களை நட்த்தியுள்ளனர்.

வெவ்வேறு அரச வம்சங்களால் மாறி மாறி ஆளப்பட்டதால் கல்வையான ஒரு பண்பாட்டு அம்சங்களை இந்நகரம் தன்னுள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க  காபி மற்றும் முந்திரி ஏற்றுமதியில் இந்த நகரம் இன்றும் முன்னணியில் இருப்பதால் சிறப்பு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

இயற்கை ரசிகர்களின் சொர்க்கம்

மங்களூரின் ஒப்பிட முடியாத இயற்கை வனப்பு ஒரு விசேஷ கீர்த்தியை அதற்கு தந்திருக்கிறது. நேத்ரவதி மற்றும் குர்புரா என்ற இரு ஆறுகளின் முகத்துவார நீர்த்தேக்கங்களை ஒட்டி 132.45 சதுர கி.மீ பரப்பளவுக்கு மங்களூர் நகரம் அமைந்திருக்கிறது.

அரபிக் கடலின் மாசற்ற பொன் நிற கடற்கரைகள் காற்றில் அசையும் பனை மரங்களோடு இங்கு காட்சியளிக்கிறது. அவற்றுக்கு பின்னே பசுமையான் மலைகளும் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட பாரம்பரிய வீடுகளும் அழகுற காட்சியளிக்கின்றன. சுமார் 6 லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

சம்பிரதாயங்களும் பண்பாடும் பல்விதமான கலவையான மொழிப் பின்னணியையும் வம்சா வளியினரையும் கொண்டிருப்பது மங்களூரின் அடையாளமாகும். தவிர பல்வித மதங்களையும் ஒருசேர கொன்டிருக்கும் மங்களூரில் துளு, கொங்கணி, பேரி மற்றும் கன்னடா போன்ற நான்கு முக்கிய மொழிகள் பேசப்படுகின்றன. ஆகவே மங்களூர் எல்லா பண்பாடுகள் சம்பிரதாயங்கள் உணவு முறைகள்  மற்றும் நாகரிகங்கள் கலந்த ஒரு கலவையான சுவாரசிய நகரமாக மிளிர்கிறது.

இந்த நகரில் குறிப்பிட த்தக்க கலையம்ச விசேஷங்களாக யக்‌ஷகானம், கிருஷ்ண ஜன்மாஷ்டமி, கரடி வேஷ நடனம் போன்ற வற்றை குறிப்பிடலாம். தசரா கொண்டாட்டங்களின் போது மங்களூர் ராஜ களை பூணுவதால் இதை கண்டு களிக்க வெளி நாடுகள் பலவற்றிலிருந்து ரசிகர்கள் வருகின்றனர்.

பார்க்கவும் அனுபவிக்கவும் அம்சங்கள் ஏராளம்

இயற்கை அழகு மட்டுமல்லாது பாரம்பரிய ஸ்தலங்கள் என்று ஏராளம் ஒரு சுற்றுலா பயணிக்காக மங்களூர் வாரி வழங்குகிறது. இங்குள்ள மங்களாதேவி கோயிலை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இது தவிர பழமையான மங்களூரின் அடையாளமாக திகழும் இடங்களாக கதரி மஞ்சுநாதர் கோயில், செயிண்ட் அலோசியஸ் பீடம், ரொஸாரியோ தேவாலயம் மற்றும் ஜமா மஸ்ஜித் போன்றவை விளங்குகின்றன. தங்க நிற கடற்கரையை சூரிய வெளிச்சத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு சோமேஸ்வரா கடற்கரை மற்றும் தன்னீர்பாவி கடற்கரை போன்றவை உள்ளன.

மங்களூர் நகரமானது தன்னுடைய இயற்கையான புவியமைப்பு மற்றும் வனப்பு காரணமாக பன்னெடுங்காலமாகவே பயணிகளை ஈர்த்து வந்துள்ளதுடன் அது இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மங்களூர் சிறப்பு

மங்களூர் வானிலை

சிறந்த காலநிலை மங்களூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மங்களூர்

  • சாலை வழியாக
    மங்களூரை சாலை மார்க்கமாக NH-13, NH-17, NH-48 போன்ற தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. கர்நாடக அரசுப்போக்குவரத்துக்கழகம் மங்களூரியிலிருந்து எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகளை இயக்குகின்றன. தட்சிண கன்னட பேருந்து அமைப்பும் பல்வகை பேருந்துகளை இயக்குகின்றன. உள்ளூர் போக்குவரத்துக்கு வெள்ளை நிற வாடகை கார்களும் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மங்களூர் பெங்களூர், சென்னை, மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் பல ரயில் மார்க்கங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. மங்களூர் செண்ட்ரல், மங்களூர் ஜங்ஷன் என்று இரண்டு ரயில் நிலையங்கள் இங்கு உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மங்களூரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளதால் பல உள்நாடு மற்றும் வெளி நாட்டு சேவைகள் இங்கு உண்டு. நகரிலிருந்து வடகிழக்கில் 10 கி.மீ தூரத்தில் பாஜ்பே என்னும் இடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. ஸ்பைச்ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இண்டியா போன்ற பல விமான சேவைகள் மங்களூரிலிருந்து கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri