மேற்குதொடர்ச்சி மலைகள், மங்களூர்

மங்களூர் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் சஹயாத்ரி மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது. ஐந்து மாநிலங்களில் நீண்டிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் இந்தியாவின் மேற்குப்பகுதியின் பிரதான புவியியல் அமைப்பாகும்.

1600 கி.மீ நீளமுள்ள இந்த மலைத்தொடர் குஜராத்திலிருந்து துவங்கி மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா வழியாக நீண்டுள்ள இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. பல ஆறுகளுக்கு இந்த மலைத்தொடர் நீர்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது. பலவிதமான தாவர இனங்களும் உயிரினங்களும் மிகுந்து காணப்படும் இந்த மலைத்தொடரில் 325 அரிய வகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.சராசரியாக இம்மலைத்தொடரின் உயரம் 1200 மீட்டர்களாக உள்ளது.

புவியியல் ரீதியாக இம்மலைத்தொடர் மலைகள் அல்ல என்றும் தக்காண பீடபூமியின் புடைப்பு என்றும் வரையறுக்கப்படுகிறது. மனித முயற்சியில் பல ஏரிகளும் நீர்த்தேக்கங்களும் இத்தொடரை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளன. நீலகிரி மலையிலுள்ள ஊட்டி ஏரி , பழனி மலையில் உள்ள கொடைக்கானல் ஏரி போன்றவை இம்மலைத்தொடரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏரிகளாகும்.

கோதாவரி, கிருஷ்ணா, காவேரி போன்ற எக்காலமும் நீர் ஓடும் ஆறுகள் இதிலிருந்து பிறக்கின்றன. மழைக்காலத்தின் போது பெருக்கெடுத்தோடும் ஆறுகளும், ஓடைகளும் பல அற்புதமான நீர்வீழ்ச்சிகளையும் உருவாக்குகின்றன. கர்நாடக மாநிலத்திலுள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இவற்றுள் பிரசித்தி பெற்றது.

இந்தியாவின் மேற்குப்பகுதியின் ஈரம் நிரம்பிய காற்று அரபிக்கடலை நொக்கிய வெளியேறாமல் தடுக்கும் வகையில் இந்த மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்தியாவின் தட்ப வெப்ப நிலையையும், புவியியல் இயற்கைச்சூழலையும் சம் நிலைக்குள் வைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் இது இமயமலைக்கு நிகரான முக்கியத்துவத்தினை இது பெற்றுள்ளது.

Please Wait while comments are loading...